கம்பராமாயணம் 864 · பால 13.60

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால்செறி வேகம் பாகர் கார்முக உண்டை பாரா,
வார் சிறை கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காணப்,
பால்செறி கடலில் தோன்றும் பனை கை மால்யானை என்ன,
நீர் சிறை பற்றி ஏறா, நின்ற குன்று அனைய வேழம்.

பொருள் · Meaning in Tamil

குன்று அனைய வேழம் - மலையைப் போன்ற யானைகள்; நீர்ச்சிறை பற்றி - நீர்நிலையிலே இறங்கி; பாகர் கால் செறி - பாகர்களின் காற்றை யொத்த; வேகம் கார்முகம் உண்டை - வேகமுள்ள வில்லால் எறியப்பட்ட மண் உருண்டையையும்; பாரா - பொருட்படுத்தாமல்; வார்சிறைக் கொங்கை அன்ன - கச்சாகிய சிறைக்குள்ளிருக்கும் தனங்களையொத்த; கும்பமும் மருப்பும் காண - (தம்) மத்தகமும் கொம்பும் வெளியில் தெரியும்படி; பால் செறி கடலில் - பாற்கடலில்; தோன்றும் பனைக்கை - தோன்றிய பனைமரம் போன்ற கையினையுடைய; மால் யானை என்ன - பெரிய ஐராவதம் என்னும் யானையைப் போல; ஏறா நின்ற - கரையேறாமல் நின்றன.

யானைகள் வழியில் நீர்நிலையில் இறங்கிப் பாகனுடைய வில்லுண்டையையும் பொருட்படுத்தாமல் பாற்கடலில் இறங்கி வெளிப்பட்ட ஐராவதம் போல நின்றன என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Heedless of the clay pellets the mahouts shot from their bows, swift as the wind,
  2. showing their domed brows and tusks like breasts held tight in bodices,
  3. like the great elephant with a trunk like a palm-trunk that rose from the ocean of milk,
  4. the mountain-like elephants waded into the tanks and would not climb out.

What the poem says

Along the way the elephants plunge into ponds and refuse to come out, ignoring the clay pellets their drivers shoot at them with pellet-bows to drive them on.

Standing in the water with only their great domed heads and tusks showing, they look like Airāvatam, the white elephant of the gods, rising out of the ocean of milk when it was churned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl ceṟi vēkap pākar kārmuka uṇṭai pārā,
vārc ceṟi koṅkai aṉṉa kumpamum maruppum kāṇap,
pāl ceṟi kaṭalil tōṉṟum paṉaik kai māl yāṉai eṉṉa,
nīrc ciṟai paṟṟi ēṟā, niṉṟa kuṉṟu aṉaiya vēḻam.