கம்பராமாயணம் 865 · பால 13.61

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அறல் இயல் கூந்தல், கண்வாள், அமுது உகு குமுதச் செவ்வாய்
விறலியரோடு, நல் யாழ் செயிரியர், புரவி மேலார்,
நறை செவி பெய்வது என்ன நைவள அமுதப் பாடல்
முறைமுறை நணுகப் போனார், கின்னர மிதுனம் ஒப்பார்.

பொருள் · Meaning in Tamil

கின்னர மிதுனம் ஒப்பார் - கின்னர மிதுனம் என்னும் தேவசாதியை ஒப்பவர்களாகிய; அறல் இயல் கூந்தல் - கருமணல் போன்ற கூந்தலையும்; வாள்கண் - வாள் போன்ற கண்களையும்; அமுது உகு குமுதச் செவ்வாய் - அமுதம் சிந்தும் செவ்வல்லி போன்ற சிவந்த வாயையும் உடைய; விறலியரோடு - விறலியரோடு; நல்யாழ் செயிரியர் - நல்ல யாழை வாசிக்கும் பாணர்கள்; புரவி மேலார் - குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டவர்களாய்; செவிநறை பெய்வது என்ன - செவியில் தேனைச் சொரிவது போல; நைவள அமுதப் பாடல் - நைவளம் என்ற பண்ணோடு கூடிய இனிய பாடலை; முறைமுறை பகர்ந்து - முறை பிறழாது பாடிய வாறே; போனார் - சென்றார்கள்.

பாணர்கள் விறலியரோடு குதிரைமேல் ஏறிக் கொண்டு நைவளப் பண்ணைப் பாடியவாறே சென்றனர் என்பது. அறல் கருங்கூந்தலுக்கு உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With singing-women whose hair was like dark rippled sand, whose eyes were swords, whose red lily lips spilled nectar,
  2. the bards with their fine lutes, riding on horseback,
  3. sang in turn nectar songs in the naivaḷam mode, as though pouring honey into the ear,
  4. and went along like pairs of Kinnaras.

What the poem says

The bards ride along on horseback with the women singers who perform with them, playing their lutes and singing in naivaḷam, a classical melodic mode, so sweetly that it is like honey poured into the ear.

They are compared to the Kinnaras, celestial musicians who always appear in loving pairs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟal iyal kūntal, kaṇ vāḷ, amutu uku kumutac cev vāy
viṟaliyarōṭu, nal yāḻc ceyiriyar, puravi mēlār,
naṟai cevip peyvatu eṉṉa naivaḷa amutap pāṭal
muṟai muṟai pakarntu pōṉār, kiṉṉara mituṉam oppār.