கம்பராமாயணம் 866 · பால 13.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அங்குசம் நிமிர - பாகன் கையிலுள்ள அங்குசம் ஓங்கிஎழ; அருவி பெய் வரையின் - அருவி நீரைப் பொழியும் மலை போன்ற தோற்றத்தோடு; பொங்க - கிளர்ந்தெழுந்து; இரியலின் - நிலைகெட்டு ஓடுவதால்; எங்கும் சனங்கள் - எல்லா இடத்திலும் மக்களை; சிந்த - சிதறச் செய்கின்ற; இளங்களிச் சிறுகண் - இளமையையும், மதக்களிப்பையும், சிறிய கண்களையும் உடைய; யானை - யானையிலிருந்து; விரி சிறைத் தும்பி - விரிந்த சிறகுகளையுடைய வண்டுகள்; வேறு ஓர் வார் மதம் - வேறொரு (யானையின்) பெருகும் மதநீரில்; தோய்ந்து - படிந்து; மாதர் சுரிகுழல் படிய - பெண்களின் சுருண்ட கூந்தலில் தோயுமாறு; வேற்றுப் பிடியொடும் - வேறு ஒரு பெண் யானையை, தொடர்ந்து செல்வ - தொடர்ந்து செல்வன வாயின.
பாகன் தன் கையிலிருந்த அங்குசத்தை ஓங்க, அதனால் கிளர்ந்தெழுந்து நிலைகெட்டு ஓடுவதால் எல்லாவிடத்தும் மக்களைச் சிதற அடிக்கும் யானையிடமிருந்து சிறைத் தும்பிகள் நீங்கி வேறொரு பெண் யானையின் மீது அமர்ந்து வரும் பெண்களின் கூந்தலில் படியுமாறு சென்றன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Surging up like a mountain that pours down waterfalls, when the goad was raised, everywhere
- the young, small-eyed elephant in its frenzy ran amok and scattered the people;
- and the wide-winged bees, after dipping into the falling must of another,
- followed another cow-elephant, to settle in the curling hair of the women.
What the poem says
A young elephant in must, streaming like a mountain with waterfalls, bolts when its driver raises the goad, scattering people in all directions.
The bees that had been feeding on its must abandon it, sip from another elephant, and then follow a cow-elephant carrying women, to settle in their fragrant curls. Even the bees are part of the restless movement of the march.