கம்பராமாயணம் 8650 · யுத்த 21.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இராமன் வந்திலன் - இராமன் (போர் நிகழுமிடத்திற்கு) வந்தானல்லன்; வேறு ஓர் மலை உளான் - (அவன்) வேறு ஓர் மலையினிடத்தே தங்கியிருக்கின்றான்; மாயம் தந்தன தீர்ப்பான் உந்தை - நாம்பகைவர் மாட்டுச் செய்கின்ற மாயைகளை (அவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்து) தீர்ப்பவனாகிய உன் சிறிய தந்தை; உண்பன தாழ்க்கப் போனான் - (வானர சேனைகள் உண்ணுதற்கு உரியனவாகிய உணவுகள் வரத் தாழ்த்தமையால் (அவற்றைக்) கொணர்தற்குப் (புறத்தே போயினான்; “தாழா எந்தை! ஈது இயன்றது” என்றார்- (செயலாற்றுவதில்) காலந்தாழாத எந்தை போல்பவனே! இதுவே (போர்க்களத்தில்) நிகழ்ந்ததாம் எனத் தூதர்கள் கூறினர்; “மகோதரன் யாண்டை?” என்ன - (அதனைக் கேட்ட இந்திர சித்து மகோதரன் எவ்விடத்துள்ளான்? எனவினவ; “அந்தரத்திடையன்” என்றார் - 'அவன் ஆகாயத்திடத்தே மறைந்தனன்' என (தூதர்) கூறினர்; இராவணி “அழகிற்று” என்றான் - இந்திரசித்து (மகோதரன் செயல்) 'அழகாயிருக்கிறது என (இகழ்ந்து) கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Irāmaṉ has not come; he is on another hill; your uncle, who undoes
- the illusions we work, has gone off because their food was delayed. You who never delay,
- our lord, this is what happened," they said. "Where is Makōtaraṉ?" he asked.
- "He is in the sky," they said; and Irāvaṇi said, "How fine."
What the poem says
The messengers answer Intiracittu, called Irāvaṇi, son of Irāvaṇaṉ. Irāmaṉ is not on the field but on another hill. Vīṭaṇaṉ, Intiracittu's uncle, who keeps exposing the rākṣasas' magic, has gone away to bring food for the monkey army, which was running late.
Asked about Makōtaraṉ, they say he has hidden in the sky. Intiracittu's 'how fine' is contempt for a commander who has fled.