கம்பராமாயணம் 8699 · யுத்த 21.212

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்மேல் வைத்த காதலின் - மண்ணிடத்தே வைத்த பற்றுக் காரணமாக, மாதாமுதலோர்க்கும் - (என்னுடைய) தாயார் முதலானோர்க்கும், புண்மேல் வைத்த தீநிகர் துன்பம் புகுவித்தேன்- புண்ணிடத்தே தீ நுழைந்தாற் போன்ற பெருந்துன்பத்தை உண்டாக்கி விட்டேன்; பெண்மேல் வைத்த காதலின் - (சீதை என்னும்) பெண்ணிடத்தே வைத்துள்ள ஆசையினால்; இப்பேறுகள் பெற்றேன் - இத்தகையபயன்களை அடைந்தேன்; என்புகழ் எண்மேல் வைத்தேன் - எனது புகழ்த்திறங்களை (ஒன்றன் மேலொன்றாகப் பிறர் எண்ணி மதிக்குமாறு உயர்த்தினேன்; யான்தான் எளியேனோ? - நான்தான் வலியற்ற எளியவனோ?

மண்மேல் வைத்த காதல் - தசரதன் கொடுப்பக் கொள்ள விசைந்த ஆட்சிக் காதல். இதனால் தந்தை இறப்பத்தாயார் முதலானோர்க் குற்ற பெருந்துயர் இதனைப் புண்மேல் வைத்த தீ நிகர்துன்பம்' என்றான். பெண்மேல் வைத்த காதல் என்றது சீதைவிரும்பியவாறு ஆராயாமல் மாயமான்பின் சென்றமை. இப்பேறுகள் என்றது, மனைவியை மாற்றான் கொண்டேகவும், அன்புத் தம்பியையும் ஆருயிர்த் தோழர்களையும் போரில் இழந்து வருந்தும் நிலையினை. எண்மேல் வைத்தல் - அளவுக்கு மேலாக உயர்த்துவைத்தல். புகழ் என்றது புகழுக்கு மாறாகிய பழியை உணர்த்தியது. எளியேனோ என்ற விடத்து ஓகாரம் எதிர் மறையாய் இரக்கமற்ற வன்னெஞ்சினேன் என்னும் பொருள் தந்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Through the love I set on the earth, upon my mother and the rest
  2. I brought a grief like fire laid upon a wound;
  3. through the love I set on a woman, I have won these rewards;
  4. I have raised my fame past all counting; am I so weak, then?"

What the poem says

Irāmaṉ accuses himself bitterly. His wish for the earth, in agreeing to accept the throne his father offered, led to his exile, his father's death and his mothers' grief. His love for a woman, in chasing the golden deer to please Cītai, led to her abduction and now to the death of his brother and friends.

The commentary reads 'fame' as irony meaning disgrace. 'Am I so weak?' means the opposite: he must be cruelly hard-hearted to survive all this.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṇmēl vaitta kātaliṉ, mātā mutalōrkkup
puṇmēl vaitta tī nikar tuṉpam pukuvittēṉ;
peṇmēl vaitta kātaliṉ, ip pēṟukaḷ peṟṟēṉ;
eṇmēl vaittēṉ; eṉ pukaḻ; yāṉtāṉ eḷiyēṉō?