கம்பராமாயணம் 8753 · யுத்த 23.3

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விளைந்தவாறு உணர்ந்திலாதான், ஏங்கினான், வெதும்பினான்; மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான்; 'ஆவி உண்டு, இலை 'என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங்கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான்.

பொருள் · Meaning in Tamil

விளைந்தவாறு உணர்கிலாதான் - (பிரம்மாத்திரத்தால்) நிகழ்ந்ததை உணரமுடியாத வீடணன், ஏங்கினான், வெதும்பினான் மெய் உளைந்து உளைந்து உயிர்த்தான் - ஏக்கங்கொண்டு, மனம் வெதும்பி உடம்பு வருந்தி வருந்தி பெருமூச்சுவிட்டு; 'ஆவிஉண்டு, இலை' என ஓய்ந்தான் - உயிர் உண்டோ, இல்லையோ? என்னும்படி ஓய்வுற்றவனாய்; வளைந்த பேய்க்கணமும் நாயும் நரிகளும் இரிய - (பின்புசற்று தேறி) பிணங்களைச் சூழ்ந்து கொண்டிருந்த பேய்க் கணமும் நாய்க்கூட்டமும், நரிக்கூட்டமும் அஞ்சி ஓடுமாறு; வந்தான் - (பிணங்களுக்கிடையே) நடந்துவந்து; இளங்கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் - இளையவனாகிய இலக்குவனோடும் தரையில் சாய்ந்து கிடக்கும் இராமனை இடையே பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not knowing how this had come about, he pined, he burned within; his body
  2. aching and aching, he sighed; he sank so that one might ask, “Is there life in him or not?”;
  3. then he came on, making the ghoul-hosts, dogs and jackals crowding round flee,
  4. and in their midst he saw Irāmaṉ, fallen with his young kinsman.

What the poem says

Vīṭaṇaṉ, who does not know what has caused this slaughter, is overcome with grief and seems barely alive himself. When he recovers a little, he walks across the field, scattering the ghouls, dogs and jackals that have gathered around the corpses.

Among the bodies he finds Irāmaṉ lying beside his younger brother Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḷaintavāṟu uṇarkilātāṉ, ēṅkiṉāṉ, vetumpiṉāṉ; mey
uḷaintu uḷaintu uyirttāṉ; 'āvi uṇṭu, ilai 'eṉṉa, ōyntāṉ;
vaḷainta pēyk kaṇamum nāyum narikaḷum iriya, vantāṉ;
iḷaṅ kiḷaiyōṭum cāynta irāmaṉai iṭaiyil kaṇṭāṉ.