கம்பராமாயணம் 8755 · யுத்த 23.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயினும் “இவருக்கில்லை அழிவு” எனும் அதனால் - (வீடணன் அத்தகைய) பேரன்புடையவனாயினும், “இவ்விராம இலக்குவர்க்கு அழிவு இல்லை” என்கின்ற உறுதியான நம்பிக்கை இருந்தமையால்; ஆவிபோயினது இல்லை - அவன் ஆருயிர் பிரியவில்லை; வாயால் புலம்பலன் பொருமி பொங்கி - வாயால் பல சொல்லிப் புலம்பவும் இல்லை, உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டு துன்பம் கிளரப் பெற்று; தீயினும் எரியும் நெஞ்சின் - நெருப்பினும் மிக்குக் கொதித்து எரிகின்ற நெஞ்சினிடம் மிக்குத்தோன்றும் அச்சத்தால்; தெரியநோக்கி - அவர்களுடைய வீழ்ந்து கிடக்கின்ற உடலங்களைத் தெளிவாகப் பார்த்துவிட்டு; “நாயகன் மேனிக்கு இல்லை வடு” - 'தலைவனாகிய இராமன் மேனிக்கு (அம்பினாலாய) வடு ஏற்படவில்லை'; என நடுக்கம் தீர்ந்தான் - என அறிந்து மனநடுக்கம் நீங்கப் பெற்றவனானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Yet, because of the thought “For these there is no ruin,” his life
- did not leave him; he did not wail aloud, but sobbing within, surging,
- with the dread of a heart that burned hotter than fire he looked closely,
- and finding “There is no wound on the Lord's body,” his trembling ceased.
What the poem says
Vīṭaṇaṉ's love for Irāmaṉ is great enough to kill him, but his firm faith that Irāmaṉ and Ilakkuvaṉ cannot be destroyed keeps him alive. He does not cry out. He grieves in silence, with a heart burning in fear.
Looking carefully at the fallen bodies, he sees that Irāmaṉ bears no arrow wound. That discovery steadies him.