கம்பராமாயணம் 888 · பால 14.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓர் வேழம் - ஒரு யானையானது; நேர் ஒடுங்கல் இல் - நேராக அடங்காத, பகையினை - பகைவரை; நீதியால் வெல்லும் - (அரச) தந்திரத்தால் வெல்லுகின்ற; சோர்வு இடம்பெறா - மனத் தளர்ச்சியில்லாத; உணர்வினன் - நல்லுணர்வுடைய அரசனது; சூழ்ச்சி போல - ஆலோசனை போல; காரொடும் தொடர் கவடு - மேக மண்டலத்தை அளாவும் கிளைகளையுடைய எழில் மராமரம் - அழகிய மராமரத்தின்; குவட்டை - அடிப்பகுதியை; வேரொடும் கொடு - வேரோடு பறித்துக்கொண்டு; கிரிஎன - மலைபோல; நடந்தது - நடந்து சென்றது. கட்டிய மரத்திலிருந்து தன்னை விடுவிக்க எண்ணிய யானையொன்று, தன் சூழ்ச்சியால் அம் மரம் முழுவதையும் வேரோடு சாய்த்து இழுத்துச் சென்றது. இது, தன்னைப் போரில் அகப்படுத்திய பகைமன்னனிடமிருந்து விடுவிக்க வேண்டித் தந்திரத்தைக் கையாண்ட தளராத ஊக்கமுடையவனது செயல் போன்றது. குவடு - ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A foe that will not give way in open fight, he overcomes by statecraft:
- like the scheming of such a king, whose understanding never yields to weariness,
- taking the trunk of a lovely marāmaram tree whose forked boughs reach the clouds,
- roots and all, an elephant walked off like a moving hill.
What the poem says
Scenes from the camp. An elephant tied to a great marāmaram tree wants to get free. Instead of straining at the rope, it pulls the whole tree up by the roots and walks off with it like a walking hill.
The poet compares this to a shrewd, tireless king who has been cornered by an enemy too strong to defeat in battle. Rather than fighting head-on, he gets free by clever policy.