கம்பராமாயணம் 8897 · யுத்த 25.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கட்டுரை அதனைக் கேளா, கண்ணெரி கதுவநோக்கி - மாலியவான் கூறிய அவ் உறுதி மொழிகளைக் கேட்டு தன் கண்களில் தோன்றிய தீப்பொறி அம்மாலியவானைப் பற்றுமாறு சினந்து நோக்கி, அரக்கர் பட்டனர் என்னின் படைத்த படைக்கலம் எல்லாம் - அரக்கர்களெல்லாம் இறந்து பட்டனர் என்றாலும், நாம் படைத்த படைக்கலங்களெல்லாம், கெட்டன எனினும், இனி கிளி அனாளை - கெட்டுப் பயனற்றன என்றாலும், இனிக் கிளிபோன்ற சொற்களைப் பேசுகின்ற சீதையை; நான்பிடித்தது வேட்கை வீய வாழ்க்கை கெடாது விட்டிட எண்ணியோ? - நான் பற்றியது, என் ஆசை கெட, என் உயிர் வாழ்க்கை கெடாமல் (கை) விட்டுவிட நினைத்தோ? (அன்றே என்றபடி).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hearing that firm counsel, he glared so that fire from his eyes seized upon him:
- “Even if the demons are dead and all the weapons we possessed
- are ruined, did I seize her who is like a parrot
- only to let her go, my desire dying, so that my life might not be ruined?”
What the poem says
Irāvaṇaṉ rejects the advice in fury, glaring at Māliyavāṉ as if to burn him.
His army may be dead and his weapons useless, but he did not abduct Cītai, whose voice is like a parrot's, only to hand her back and give up his desire just to save his own life.