கம்பராமாயணம் 8898 · யுத்த 25.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைந்தன் என்? மற்றையோர் என்? - (என்) மகன் என்ன? மற்றை யவர்தாம் என்ன? அஞ்சினிர் வாழ்வு வேட்டீர் நீர் உய்ந்து போமின் - இவ்வாறு அச்சங்கொண்டவர்களாய் உயிர் வாழ்க்கையை விரும்பியவர்களாய் உள்ள நீங்கள் பிழைத்துப் போங்கள்; நாளை ஊழி வெந்தீயின் ஓங்கி - நாளைக்கு ஊழிக்காலத்துத் தோன்றும் கொடிய வடவைத் தீப்போலப் பொங்கி; 'சிந்திய மனித்தரோடு அக்குரங்கினைத் தீர்ப்பேன்' - 'எனது சேனைகளை அழித்த அம்மனிதரோடு அக்குரங்கினையும் (அனுமனை) அழித்தொழிப்பேன்' என்றான் வெந்திறல் அரக்கர் வேந்தன், மகன் இவை விளம்பலுற்றான் - என்று கூறினான் கொடிய திறமையை உடைய அரக்கர் தம் வேந்தனாகிய இராவணன். (அதுகேட்ட அவன் மகன் இந்திரசித்து இவற்றைச் சொல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “What is my son? What are the others? You who are afraid and crave life,
- save yourselves and go! Tomorrow, rising like the fierce fire at the end of the age,
- I will finish off those men who scattered my host, and that monkey with them,”
- said the king of the demons of fierce might; and his son began to say these things.
What the poem says
Irāvaṇaṉ turns his anger on everyone. He does not need his son or anyone else. Those who are afraid and want to live can go.
The next day he will rage like the fire that ends the world and destroy the two men and that monkey himself. Then his son Intiracittu begins to speak.