கம்பராமாயணம் 8899 · யுத்த 25.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உணர்ந்தனை கோடல் உண்டேல் நான் உணர்த்தற் பாலது உளது - உணர்ந்து கொள்ளும் எண்ணம் இருக்குமாயின் நான் கூறத் தகுவது உளது; தளமலர்க்கிழவன் தந்த படைக்கலம் தழலின் சார்த்தி - (என்னவெனில்) இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமன் கொடுத்த பிரமாத்திரத்தைத் (தூப) தீப வழிபாடு செய்து; அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் - அளவற்ற ஆற்றலுடையதாய் அமைத்துவிட்டது இராமனை நீக்கியதன்று (அவனையும் கொல்ல வேண்டுமென்றே விடுத்தேன்; விளைவு இலது, அனையன் மேனி தீண்டில, மீண்டது அம்மா! - (எனினும்) பயன் இலதாய் அந்த இராமனின் மேனியைத் தீண்டாததாய் மீண்டது (இது) பெருவியப்பாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “There is something I should tell you, if you will take it to heart:
- the weapon given by the lord of the petalled flower, which I consecrated in the fire
- and loosed with boundless power, I did not send to spare Irāmaṉ;
- yet it had no effect; it did not touch his body, and turned back. Strange indeed!”
What the poem says
Intiracittu speaks up. He asks his father to listen to something important.
He performed the full fire ritual over Brahmā's weapon and released it with its whole power, aiming it at Irāmaṉ as well as the others. Yet it did not even touch Irāmaṉ's body and simply came back. Intiracittu finds this astonishing.