கம்பராமாயணம் 8900 · யுத்த 25.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேன் உகு தெரியல் மன்னா! - தேன் சிந்தும் மாலையை அணிந்த அரசே! மானிடன் அல்லன், தொல்லை வானவன் அல்லன் - (அவ் இராமன்) மனிதகுலத்தைச் சேர்ந்தவன் அல்லன், பழைமையான வானவர் மரபைச் சார்ந்தவனும் அல்லன்; மற்றும் மேல் நிமிர் முனிவன் அல்லன் - மற்று, மேன்மைபொருந்திய முனிவனும் அல்லன்; வீடணன் மெய்யின் சொன்ன - வீடணன் உண்மையாக ஆராய்ந்து சொன்ன; யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே - யான் எனது என்னும் செருக்கினை நினையாமல் நீங்கியுள்ள ஞானிகள் என்றும் எண்ணுதற்கு உரிய ஒப்பற்ற பரம்பொருள் என்றே; சேகு அறத் தெரிந்தது - ஐயமறத் தெளிவாயிற்று. “அன்று” “ஏ” - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “He is no man; he is no god of old; nor
- is he some lofty sage; as Vīṭaṇaṉ said in truth,
- he is the One on whom those freed from the thought of ‘I’ and ‘mine’ meditate:
- this has become clear beyond doubt, king with the honey-dripping garland!”
What the poem says
Intiracittu draws the conclusion Vīṭaṇaṉ reached long ago. Irāmaṉ is not a mere man, not one of the ancient gods, and not a great sage.
He is the one Supreme Being on whom the enlightened meditate, those who have let go of the ego's sense of "I" and "mine." Even the demon prince now sees this clearly.