கம்பராமாயணம் 890 · பால 14.4

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கதம் கொள் சீற்றத்தை - கறுவு கொள்ளும் கோபத்தை; ஆற்றுவான் - தணிக்கும் பொருட்டு; இனியன கழறி - (அந்த யானைக்கு) இனிமையான வார்த்தைகளைக் கூறி; பதம் கொள் - (பக்குவமாக அதனை) வசப்படுத்த முயலும்; பாகனும் - யானைப் பாகனும்; மந்திரி ஒத்தனன் - (தவறான வழியில் செல்லும் அரசனை வசப்படுத்த முயலும்) அமைச்சனை ஒத்திருந்தான்; ஓர்யானை - (அப்போது அப் பாகனது இன்சொல்லைக் கொள்ளாது வெறிகொண்ட) ஒரு யானையானது; பன்னூல் விதங்களால் - பல நூல்களில் கூறிய முறைக்கு ஏற்ப; அவன் - அந்த அமைச்சன்; மெல்லென மெல்லென - (மன்னவன் மனங்கொள்ளுமாறு) மெல்ல மெல்ல; விளம்பும் - சொல்லுகின்ற; இதங்கள் - நன்மை பயக்கும் சொற்களை; கொள்கிலா - காது கொடுத்துக் கேட்காத (மாறான வழிச்செல்லும்); இறைவனை - அரசனை; ஒத்தது - ஒப்பதாக ஆயிற்று.

பாகனுடைய இன்சொல்லைக் கேளாது மதவெறி கொண்ட யானைக்கு, அமைச்சனின் இனிய சொல்லைக் கேளாது மாறுவழியில் நடக்கின்ற மன்னவன் உவமை. 'மதக்களிறு வலியாக. கதம்தலையழியக் கந்தோடு ஆர்த்து சாமக்த ஓசையில் தணிக்கும் நூலறி பாகரொடு' - (பெருங் /.44:6/ -64

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Speaking sweet words to cool its seething rage,
  2. the mahout trying to win it over was like a minister; by the many treatises'
  3. methods that minister speaks gently, gently, offering good counsel;
  4. like a king who will not take that counsel was one elephant.

What the poem says

An elephant in rut goes wild in the camp. Its mahout tries to calm it with soothing words, but it will not listen.

The poet sees in this a familiar scene from court life. A wise minister, following the methods laid down in the books of statecraft, gently and patiently advises a headstrong king to change course, and the king ignores him. A parallel passage from the Peruṅkatai is cited, describing mahouts learned in their craft who calm a raging elephant with soft sounds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1katam koḷ cīṟṟattai āṟṟuvāṉ iṉiyaṉa kaḻaṟip
patam koḷ pākaṉum mantiri ottaṉaṉ; pal nūl
vitaṅkaḷāl avaṉ melleṉa melleṉa viḷampum
itaṅkaḷ koḷkilā iṟaivaṉai ottatu ōr yāṉai.