கம்பராமாயணம் 891 · பால 14.5

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும்,
தாறு பாய் கரி வன கரி தண்டத்தைத் தடவிப்,
பாறு பின் செலக் கால் எனச் செல்வது, பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றது ஏ.

பொருள் · Meaning in Tamil

மாறு - (தனது) பகையை; காண்கிலதாய் நின்று - காணப் பெறாமல் நின்று; மழை என முழங்கும் - மேகம் போல இடித்தொலிக்கின்றதும்; தாறு பாய் கரி - இரும்பு முள்ளால் குத்தப் பெற்றதுமாகிய யானை; வனம் கரி தண்டத்தை - காட்டு யானைகள் சென்ற ஒரு வழியை; தடவி - பின்பற்றி; பாறு பின்செல - பருந்துகள் பின்னால் தொடர்ந்து வர; கால் எனச் செல்வது - காற்றைப் போல விரைந்து செல்வது; பண்டு ஓர் ஆறு போகிய - முன்பு நதி சென்ற வழியே; ஆறு போம் - செல்லுகின்ற, ஆறு - ஆற்றை; போன்றது - ஒத்தது. தனக்கு ஒரு பகையைக் காணமுடியாமல் காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் பெருவழியில் அவற்றின் மோப்பத்தையுணர்ந்த யானை (சேனை) யொன்று, அவை பகையினம் என்று கருதிப் பாகனுக்கும் அடங்காமல், வெறிகொண்டு அவ் யானைக் கூட்டம் சென்ற வழியே தனிவழியை உண்டாக்கிக் கொண்டு விரைந்து சென்றது. அது பழமையான நதி செல்லும் வழியை நாடியவாறு மற்றொரு சிற்றாறு பெருக்கெடுத்துச் செல்வது போன்று உள்ளது என்றார். யானையின் வேகத்தால் பறவைகள் சிதறப்பெறுவதாலும், எதிர்ந்த உயிர்களைக் கொன்று செல்வதால் அவற்றின் இறைச்சி வேட்கையாலும் “பாறு பின்செல்” என்றார். தண்டம் - யானை செல்வழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Finding no foe to face, standing and roaring like a thundercloud,
  2. an elephant pricked by the goad followed the trail of the wild elephants
  3. and sped off like the wind with kites following behind; it was like
  4. a river running along the course where a river once ran.

What the poem says

A war elephant from the army catches the scent of wild elephants on a forest trail. It takes them for enemies, defies its driver and charges down their path, crushing everything in its way. Kites follow it, hoping for the flesh of the creatures it kills.

The last line plays on the Tamil word āṟu, which means both "way" and "river". The elephant racing down the old trail is like a fresh flood running down the dry bed of an older river.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟu kāṇkilatāy niṉṟu, maḻai eṉa muḻaṅkum,
tāṟu pāy kari vaṉa kari taṇṭattait taṭavip,
pāṟu piṉ celak kāl eṉac celvatu, paṇṭu ōr
āṟu pōkiya āṟu pōm āṟu pōṉṟatuvē.