கம்பராமாயணம் 893 · பால 14.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அலகு இல் யானைகள் - (உருவம் வலிமைகளை) அளவிடமுடியாத ஆண் யானைகள்; அநேகமும் - பலவும்; அவற்றொடு மிடைந்த - அவ் யானைகளோடு நெருங்கியுள்ள; திலகம் வாள் நுதல் - சிந்துரத் திலகம் தீட்டிய ஒளியுள்ள நெற்றியையுடைய; பிடிகளும் - பெண்யானைகளும்; குருளையும் - யானைக் குட்டிகளும்; செறிந்த - நெருங்கியிருந்தவை; உலவை நீள் வனத்து - மரங்கள் மிகுந்துள்ள நீண்ட வனத்திலே; ஊதமே ஒத்த - வாழும் காட்டு யானைக் கூட்டத்தை ஒத்திருந்தன; சந்திர சயிலம் - அந்தச் சந்திர சயிலமானது; அவ் ஊதத் தலைவனே - அந்த யானைக் கூட்டத்தின் தலைவனை; ஒத்துப் பொலிந்தது - ஒத்து விளங்கியது.
சேனையிலுள்ள யானைகள் சந்திரசயிலத்து அருகில் இருந்த தோற்றம், காட்டு யானைக் கூட்டமும், யானைக் கூட்டத் தலைவனும் போன்று இருந்தது என்றார். யானைகள் யாவும் பெரிய மலையை அடுத்த சிறுசிறு குன்றும் போலிருந்தன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Countless tuskers, many of them, and pressing close among them
- cow elephants with bright brows marked with tilakam, and their calves, crowded together,
- were like a herd in a long forest thick with trees; and like the leader
- of that herd, the Moon Mountain shone in splendour.
What the poem says
The army's elephants are gathered at the foot of the Moon Mountain: countless tuskers, cows with their foreheads painted with red sindūra marks, and calves.
Together they look like a wild herd in the forest, and the mountain towering over them looks like the great bull that leads the herd. The elephants are small hills gathered around a big one.