கம்பராமாயணம் 894 · பால 14.8

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட தன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே!
உருண்ட வாய் தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி,
இருண்ட கல்லையும் தம் நிறம் ஆக்கிய இரதம்.

பொருள் · Meaning in Tamil

தெருண்ட மேலவர் - தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர் சேரினும் - சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட அவர்தம் - அறிவுத் தெளிவில்லாமல் மயங்கிய அவர்களுடைய; புன்மையை - இழி குணத்தை, மாற்றுவர் எனும் - போக்குவர் என்று சொல்லுகின்ற, இது - இந்த வார்த்தை; வழக்கே - முறைமையானதே (உலக இயல்பு); இரதம் - (ஏனெனில்) இரதங்கள்; பொன் உருள் உருண்ட - பொன்னால் இயன்ற சக்கரங்கள் உருண்டு சென்ற; வாய்தொறும் - இடங்கள்தோறும்; உரைத்து உரைத்து ஓடி - (தம்) பொன்னை உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட கல்லையும் - கருமையான பாறாங்கற்களையும், தம் நிறம் ஆக்கிய - (தம்) பொன்னிறமாகவே செய்யலாயின.

வேற்றுப் பொருள் வைப்பணி. தேரின் பொன்னிற உருளை சென்றதால் அங்குள்ள பாறைகள் பொன்னிறத்தை அடைந்தன என்பது. சேரினும் - எதிர்மறையும்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That the wise and noble, even when they keep company with the lowly,
  2. rid them of their foolish meanness: this saying is true indeed!
  3. For wherever their wheels rolled, the golden wheels rubbed and rubbed as they ran,
  4. and the chariots turned even the dark rocks to their own colour.

What the poem says

The golden wheels of the chariots scrape against the dark rocks of the mountain path and leave gold on them, so the black stone turns golden.

The poet draws a general truth from this. When good and wise people mix with lesser ones, they do not sink to their level. Instead they raise the others up to their own. Setting a general maxim beside a particular scene in this way is a recognised figure of speech.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teruṇṭa mēlavar ciṟiyavarc cēriṉum avartam
maruṇṭa puṉmaiyai māṟṟuvar eṉum itu vaḻakkē!
uruṇṭa vāytoṟum poṉ uruḷ uraittu uraittu ōṭi,
iruṇṭa kallaiyum taṉ niṟam ākkiya iratam.