கம்பராமாயணம் 8972 · யுத்த 25.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அக்கணத்து நின்றான் அனுமன் ‘ஐய! என் தோளின் ஆதல் - (இவ்வாறு இலக்குவன் கூற) அப்பொழுது அங்கு நின்றிருந்தவனான அனுமன் (இராமனை நோக்கி) ஐயனே! என் தோள்களிலோ; கைத்துணைத் தலத்தே ஆதல் ஏறுதிர் - அல்லது இருகைத் தலங்களிலோ ஏறிக் கொள்ளுங்கள்; காற்றும் தாழ இக்கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் - காற்றும் விரைவில் பின்னிடுமாறு இந்தக் கணத்தில் அயோத்தி என்னும் பழமையான ஊரை அடைவேன்; இடம் உண்டு என்னின் திக்கு அனைத்திலும் செல்வென் - இடம் வாய்க்குமாயின் திசை எல்லாவற்றிலும் செல்வேன்; யானே போய்ப்பகையும் தீர்வென் - (நீங்கள் விரும்பினால்) யானே தனித்துச் சென்று பகைவனையும் ஒழிப்பேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then Aṉumaṉ, who stood there, said, 'Sir! On my shoulders
- or on the palms of my two hands, climb up; leaving the wind behind,
- this very instant I will reach the ancient city of Ayōttī; if there is need,
- I will go to every quarter; or I alone will go and finish the enemy.'
What the poem says
Aṉumaṉ offers to carry Irāmaṉ and Ilakkuvaṉ on his shoulders or in his hands and reach Ayōttī in an instant, faster than the wind. He will travel in any direction required, or if they prefer he will go alone and destroy the enemy himself.