கம்பராமாயணம் 8974 · யுத்த 25.87

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான்,
சொல் அவம் சொல்லி நின்றேன்; கொன்றபின் துன்பம் என்னை
வெல்லவும் தரையில் வீழ்வுற்று உணர்ந்திலென்; விரைந்து போனான்;
இல்லையேல், உணரில், தீயோன் பிழைக்குமோ? இழுக்கம் உற்றேன்.

பொருள் · Meaning in Tamil

கொல்லவந்தானை விலக்கிக் கொள்வான் நீதி கூறினென் - சீதையைக் கொல்லவந்த இந்திரசித்தை அச்செயலினின்றும் விலக்கிச் சீதையை உய்யக் கொள்வதற்காக நன்னெறிகளை எடுத்துக்கூறினேன்; சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்றபின் துன்பம் என்னை வெல்லவும் - இதமான சொற்களைப் பேசி நின்றேன் (அவற்றைக் கேளாமல் அவன் பிராட்டியைக் கொன்ற பிறகு (பற்றிய) துன்பம் என்னை வெற்றி கொண்டதால்; தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் - தரையில் வீழ்ந்து உணர்விழந்தேன் (அப்போது அவ்விந்திரசித்து) விரைந்து போய்விட்டான்; இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ? இழுக்கம் உற்றான் - அங்ஙனமின்றி இருந்திருப்பானேயானால் தீயனாகிய அவன் உயிர் வாழ்ந்திருப்பானோ? தவறு செய்தான்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To turn back the one who came to kill, I spoke to him of right;
  2. I stood and spoke kind words as well; after he killed her, grief
  3. overcame me and I fell to the ground senseless; he went off swiftly;
  4. had it not been so, would that evil one have survived? He did wrong.'

What the poem says

Aṉumaṉ explains why Intiracittaṉ got away. He tried reasoning with him to save Cītai, but after the killing he was overwhelmed with grief and collapsed, and in that moment Intiracittaṉ escaped. Had Aṉumaṉ been in his senses, the wicked prince would never have left alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kolla vantāṉai nīti kūṟiṉeṉ, vilakkik koḷvāṉ,
collavum colli niṉṟēṉ; koṉṟapiṉ tuṉpam eṉṉai
vellavum taraiyiṉ vīḻvuṟṟu uṇarntileṉ; viraintu pōṉāṉ;
illai eṉṟu uḷaṉēl, tīyōṉ piḻaikkumō? iḻukkam uṟṟāṉ.