கம்பராமாயணம் 90 · பால 3.9

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேவரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும், விண் புகலால்
தேவரும் ஒக்கும், முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால்,
காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும், சூலத்தால் காளியை ஒக்கும்,
யாவையும் ஒக்கும் பெருமையால், எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும்.

பொருள் · Meaning in Tamil

மேவஅரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் - (அம்மதில்) அடைதற்கரிய அறிவால் எல்லை காண முடியாதபடி யிருப்பதால் வேதத்துக்கு ஒப்பாகும்; விண் புகலால் தேவரும் ஒக்கும் - விண்ணுலகம் வரை சென்றிருப்பதால் தேவர்களையும் ஒத்திருக்கும்; திண் பொறி அடக்கிய செயலால் முனிவரும் ஒக்கும் - வலிய பொறிகளை உள்ளடக்கிய செயலால் முனிவர்களை ஒத்திருக்கும்; காவலில் கலை ஊர் கன்னியை ஒக்கும் - காக்கும் தொழிலால் மானை ஊர்தியாகக் கொண்ட துர்க்கையை ஒக்கும்; சூலத்தால் காளியை ஒக்கும் - சூலம் ஏந்தி இருப்பதால் காளி தேவியை ஒத்துக் காணப்படும்; யாவையும் ஒக்கும் பெருமையால் - பெருமை மிக்க எல்லாவற்றையுமே ஒத்திருக்கும்; எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் - எவரும் எளிதில் அடைய இயலாதிருப்பதால் இறைவனை ஒத்திருக்கும்.

வேதம் அங்கங்களாலும் உபாங்கங்களாலும் பரந்திருப்பது; முடிவு காண முடியாத தன்மையுடையது. மதிலும் பரந்திருப்பது எல்லை காண இயலாதது என்பதால் 'வேதமும் ஒக்கும்' என்றார். விண்ணுலகளவும் சென்றிருப்பதால் 'தேவனை ஒக்கும்' என்றார் பொறிகளை அடக்கி வாழ்பவர் முனிவர் பலவகை இயந்திரப் பொறிகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பது மதில். எனவே 'முனிவரை ஒக்கும்' என்றார் (பொறிகள் - சிலேடை) துர்க்கை காவல் தெய்வமாய் நின்று நகரத்தைக் காவல் புரிவது போல் மதிலும் காவல் புரிவதால் 'கலையூர் கன்னியை ஒக்கும்' என்றார். கலை: மான். சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருப்பவள் காளிதேவி; மதிலிலும் பலவகைச் சூலங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, 'காளியை ஒக்கும்' என்றார் பத்தியுடையோர்க்கல்லாது பிறர் அடைதற்கரியவன் பரமன் நண்புடையவர்க்கன்றிப் பிற அரசர்களாலும் அடைய முடியாதது மதில் என்பதால் 'ஈசனை ஒக்கும்' என்றார்.

இந்தப் பாடல் சிலேடையை அங்கமாகக் கொண்டு வந்த 'உவமையணி' யாகும்.

மதிலின் உயர்வு, திண்மை, அருமை, அகலம் போன்றவைகளை எடுத்துரைத்துள்ளதை அறியலாம். சூலம்: இடிதாங்கி. சூலாயுதம் இடிதாங்கி போன்ற வடிவுடைய முத்தலைச் சூலத்தை ஏந்தியிருத்தலால் காளியும் ஒக்கும் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since no mind can reach its end, it is like the Veda; since it rises into the sky,
  2. it is like the gods; and it is like the sages, in holding its strong engines in check;
  3. in guarding, it is like the maiden who rides the stag; with its trident spikes, it is like Kāḷi;
  4. in its greatness it is like all great things; in being hard to reach, it is like the Lord.

What the poem says

The wall is compared to seven things, several through puns. Like the Vedas, it stretches so far that no one can find its end. Reaching the sky, it is like the gods. The sages restrain their poṟi, their senses, while the wall holds poṟi of another kind, its machines of defence. Like Durgā, the virgin goddess who rides a stag, it guards the city, and like Kāḷi it bristles with tridents, here the spikes along its top. Its greatness matches all great things. And like God, who can be reached only through devotion, it can be approached only by friends, never by enemy kings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēva arum uṇarvu muṭivu ilāmaiyiṉāl vētamum okkum, viṇ pukalāl
tēvarum okkum, muṉivarum okkum tiṇ poṟi aṭakkiya ceyalāl,
kāvaliṉ kalai ūr kaṉṉiyai okkum, cūlattāl kāḷiyai okkum,
yāvaiyum okkum perumaiyāl, eytaṟku arumaiyāl īcaṉai okkum.