கம்பராமாயணம் 9055 · யுத்த 26.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தடந்திரைப் பரவை அன்ன சக்கர யூகம் - பெரிய அலைகளை உடைய கடல் போன்ற சக்கரவியூகமாக அமைந்த (நினது) சேனை; புக்குக் கிடந்தது கண்டது உண்டோ? - (இவ்விடத்துப்) புகுந்து கிடந்ததே? (அதனைத்தாங்கள்) கண்டது உண்டோ? நாண் ஒலி கேட்டிலோமே - (அதன்) வில்நாண் ஒலியைக் கூட நாங்கள் கேட்கப் பெற்றிலோமே? தொடர்ந்து அயோத்திபோய் - தொடர்ந்து அயோத்தி நகரத்தினை அடைந்து; தன்னைக் கிளையொடும் துணிய நூறி - பரதனை சுற்றத்தோடும் (உடல் துண்டிக்கப்பட்டு வீழும்படி கொன்றுவிட்டு; நடந்தது எப்பொழுது - (தாங்கள் இங்கு) மீண்டு வந்தது எப்பொழுதோ? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே? - தொடங்கிய யாகம் முற்றுப் பெற்றதல்லவா? எண்ணிய செயல் நன்மையை விளைவித்ததல்லவா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your wheel formation, like the wide wave-tossed sea, that lay here,
- did you see what became of it? We did not even hear a bowstring twang;
- when did you follow the road, go to Ayōttī, cut it to pieces with all its people,
- and walk back? Is the sacrifice completed? Has the work gone well?'
What the poem says
Aṉumaṉ jeers at Intiracittaṉ. Where is the mighty wheel formation that was guarding this place? The monkeys did not even hear a bowstring sound before it collapsed. And when exactly did he go to Ayōttī, slaughter its people and return? Is his sacrifice finished? Did his plan turn out well? Every question is sarcasm.