கம்பராமாயணம் 9056 · யுத்த 26.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து - (அனைத்தையும்) தாங்குகின்ற அகன்ற நிலவுலகம் முழுவதனையும் இனிதே தங்கி இருந்து; இயற்கை தாங்கும் பாந்தளின் பெரிய திண்தோள் பரதனை - இயல்பாகத் தாங்குகின்ற ஆதிசேடனைக் காட்டிலும் பெரிய திண்ணிய தோள்களை உடைய பரதனும்; பழியின் தீர்ந்த வேந்தனைக் கண்டு - பழியினின்றும் நீங்கிய வேந்தனுமாகியவனைக் கண்டு; நீ நின் வில் வலி காட்டி மீண்டு போந்ததோ? - நீ உனது வில் வலிமையைக் காட்டி மீண்டு வந்தாயிற்றோ? உயிரும் கொண்டே? ஆயினும் புதுமை அன்றே - அதுவும் உயிருடனேயோ? ஆயினும் இது மிகவும் புதுமையன்றோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Paratan, whose strong shoulders are greater than the serpent
- that by its nature bears the whole wide earth, resting there at ease, the king free of all blame,
- did you see him, show him the strength of your bow, and come back,
- and with your life still in you? That would be something new indeed!'
What the poem says
Aṉumaṉ continues his sarcasm. Paratan, the blameless king whose shoulders are mightier than Ādiśeṣa, the cosmic serpent that holds up the earth, is no one to trifle with. Did Intiracittaṉ really face him, show off his archery, and return alive? That would be a marvel.