கம்பராமாயணம் 9057 · யுத்த 26.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அம்பரத்து அமைந்த வல்வில் சம்பரன் ஆவி வாங்கி - வானுலகத்தே (போர் மேற்கொண்டு) தங்கிய வலிய விற்படையினை உடைய சம்பரன் என்னும் அசுரனது உயிரைக் கவர்ந்து; உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு - தேவர்களுக்கு உதவி புரிந்த ஒப்பற்றவனாகிய தசரதனுக்கு; உதயம் செய்த நம்பியை - பிறந்த குணங்களால் உயர்ந்தவனை; முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன தம்பியை - முதல்வரான மூவர்க்குப் பின்னே அவர்கள் நால்வராகும் வண்ணம் தோன்றிய தம்பியாகிய சத்துருக்கனனை; கண்டு நின் தனுவலம் காட்டிற்று உண்டோ? - கண்டு நீ நினது வில் வலிமையைக் காட்டியது உண்டோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The noble one born to the man who took the life of Camparaṉ,
- whose strong bow held the sky, and so came to the aid of the gods,
- the younger brother who made the first three into four,
- did you see him and show him the strength of your bow?'
What the poem says
Aṉumaṉ's mockery turns to Catturukkaṉaṉ, the youngest of the four brothers, son of Tacarataṉ, who killed the asura Camparaṉ in the sky to help the gods. Did Intiracittaṉ meet him too and display his archery? The implied answer is that he went nowhere near Ayōttī.