கம்பராமாயணம் 9058 · யுத்த 26.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தீ ஒத்த வயிர வாளி உடல் உற - நெருப்பினை ஒத்துச் சுட்டழிக்கும் திண்ணிய அம்புகள் உடம்பில் தைத்து ஊன்றுதலால்; சிவந்த சோரி காயத்தின் செவியினூடும், வாயினும் கண்களூடும் பாய - சிவந்த இரத்தம் உடம்பினும், செவியிலும் வாயிலும் கண்களிலும் பாய்ந்து வழிய; போய், இலங்கை புக்கு வஞ்சனை பரப்பச் செய்யும் - (விரைந்து) சென்று இலங்கை நகரிற் புகுந்து நினது வஞ்சனைத் திறங்களை எங்கும் பரப்பச் செய்யும்; மாயப்போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மடியும் அன்றே? - மாயப் போரின் வலிமை அனைத்தும் இன்றோடு முடிந்து விடும் அல்லவா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the hard arrows like fire strike your body and red blood
- gushes from your frame, through your ears, from your mouth and through your eyes,
- all that power of illusory warfare with which you run off into Ilaṅkai
- and spread your deceptions will die with this very day, will it not?'
What the poem says
Aṉumaṉ predicts Intiracittaṉ's end. Ilakkuvaṉ's fiery arrows will pierce him until blood streams from his body, ears, mouth and eyes. His habit of retreating into Ilaṅkai and fighting by trickery will end today.