கம்பராமாயணம் 9059 · யுத்த 26.75

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பாசமோ, மலரின் மேலோன் பெரும் படைக் கலமோ, பண்டை
ஈசனார் படையோ, மாயோன் நேமியோ, யாதோ, இன்னும்
வீச நீர் விரும்புகின்றீர்? அதற்கு நாம் வெருவி, சாலக்
கூசினோம்; போதும் போதும்; கூற்றினார் குறுக வந்தார்.

பொருள் · Meaning in Tamil

பாசமோ? மலரின் மேலான் பெரும் படைக்கலமோ - நாக பாசமோ? தாமரை மலரில் இருப்போனாகிய பிரமனது பெருமை வாய்ந்த படைக்கலமோ? பண்டை ஈசனார் படையோ, மாயோன் நேமியோ, யாதோ - (எல்லாப் பொருட்கும்) பழையோனாகிய சிவ பெருமானின் (பாசுபதம் படையோ? திருமாலது சக்கரப் படையோ? வேறு யாதோ? இன்னும் வீச நீர் விரும்புகின்றீர்? - இனிமேலும் எங்கள் மேல் ஏவுதற்கு நீர் விரும்பியுள்ளீர்? அதற்கு நாம் வெருவிச் சாலக் கூசினோம் - (நும்மால் செலுத்தப்படும்) அப்படைக்கலத்திற்கு நாங்கள் மிகவும் அஞ்சி நடுக்கமுற்று ஒடுங்கினோம்; போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் - (நீர் அவற்றை எம்மேல் வீசியது) போதும் போதும், கூற்றுவனார் நெருங்கி வந்து விட்டார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The noose? Or the great weapon of the one on the flower? Or the weapon
  2. of the ancient Lord? Or the discus of Māyōṉ? Which is it you still
  3. wish to hurl? We are terrified of it and shrink away
  4. in dread; enough, enough! Death has come near you now.'

What the poem says

Aṉumaṉ mockingly asks which of his famous divine weapons Intiracittaṉ means to use next: the serpent noose, Brahmā's weapon, Śiva's Pāśupata or Viṣṇu's discus. He pretends to cower in fear, then says that is enough of such boasts, for Death has drawn near to Intiracittaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pācamō, malariṉ mēlāṉ perum paṭaikkalamō, paṇṭai
īcaṉār paṭaiyō, māyōṉ nēmiyō, yātō, iṉṉum
vīca nīr virumpukiṉṟīr? ataṟku nām veruvi, cālak
kūciṉōm; pōtum pōtum; kūṟṟiṉār kuṟuka vantār.