கம்பராமாயணம் 910 · பால 14.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துன்றி நெறி - நெருங்கிப் பொதிந்த; பங்கிகள் - தலை மயிர்கள்; துளங்க - காற்றால் அசைய; அழலோடும் மின் - தீயோடு மின்னல்கள்; திரிவ என்ன - திரிவன என்று சொல்லும்படி; மணி ஆரம் மிளிர் - இரத்தின மாலைகள் விளங்குகின்ற; மார்பர் - மார்பையுடைய வீரர்கள்; மன்றல் மணம் நாறும் - புதுமணம் வீசுகின்ற, பட மாடம் - (தத்தம்) கூடாரங்களில்; நுழைகின்றார் - புகுகின்றவராம்; குன்றில் - மலையிலே (உள்ள); முழைதோறும் நுழை - குகைகளிலே புகுகின்ற; கோள் அரிகள் - கொலைத் தொழில் அமைந்த சிங்கங்களை; ஒத்தார் - ஒத்தார்கள்
பட மாடங்களில் புகும் வீரர்க்குக் குகையுள் புகும் சிங்கம் உவமையாயிற்று. பங்கி: ஆண்களின் தலைமயிர். வீரர் நடந்து செல்லுகையில் அவர்கள் மார்புகளில் இரத்தின மாலைகள் விளங்குவதை நெருப்பும் மின்னலும் திரிவன போலும் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their thick, curling locks tossing, and on their chests
- jewelled necklaces flashing as if fire and lightning were roving there,
- the men entering the cloth pavilions fragrant with fresh scent
- were like fierce lions entering the caves all over a hill.
What the poem says
The warriors go into their tents. Their thick hair blows in the wind, and the gem necklaces on their broad chests flash like fire and lightning as they walk. Going into the fragrant pavilions, they are like lions going into the caves of a hill.