கம்பராமாயணம் 909 · பால 14.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெள்ளு புனல் ஆறு - தெளிந்த நீருள்ள நதிகள்; வெள்ள நெடு வாரி - (தம்மிடத்து) வெள்ளமாகிய மிகுந்த நீர்ப் பெருக்கை; அற வீசி உளவேனும் - முற்றிலும் வீசிக் கொண்டிராமல் போயினும்; கிள்ள எழுகின்ற புனல் - தோண்டத் தோண்ட ஊறுகின்ற நீரை; சிறிதே உதவுகின்ற - சிறிது சிறிதாக உதவுவனவாயின (அதனால் அவை); உள்ளது - (செல்வம் இருந்த காலத்தில் வேண்டியவர்க்குக் கொடுத்து அச் செல்வம் வறண்ட காலத்தும்) தன்னிடம் உள்ள பொருளை; மறாது - (இல்லையென்று) மறுத்துச் சொல்லாமல்; கேளிரின் விரும்பி - உறவினரைப் போல விருப்பம் கொண்டு; உதவும் - (அவர்களுக்கு) கொடுக்கும் தன்மையுள்ள; வள்ளலையும் - இரக்க குணமுள்ள வள்ளல்களையும், ஒத்த - ஒத்திருந்தன.
நதிகள் தம்மிடம் வெள்ள நீர் இருந்த காலத்தில் பலருக்கும் வேண்டியவாறு உதவி, அந்த நீர் வற்றிய காலத்தும் தோண்டத் தோண்ட மெல்ல மெல்ல ஊற்று நீரை உதவுகின்றன. வள்ளல்களுக்கு இந் நதிகள் உவமையாகும். வள்ளலையும் - உம் இசைநிறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though their long floods of water had wholly gone,
- the water that welled up as they were scratched at, given gladly as if to kin,
- the clear-watered rivers gave, a little at a time;
- they were like a generous man who never refuses what he still has.
What the poem says
The rivers near the camp are in their dry season. Their floods have gone, but if people dig into the sandy beds, water seeps up little by little, and the rivers give it freely.
The poet compares them to a truly generous patron. Having given lavishly in good times, he still gives what little he has left when he has become poor, as gladly as if the people asking were his own family. He never says "I have nothing."