கம்பராமாயணம் 912 · பால 14.26

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா,
பக்கம் இனம் மொய்த்து அயல் அலைக்க நனி பாரா,
மைக் கரி மதத்த, விலைமாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா.

பொருள் · Meaning in Tamil

ஒக்க - தக்கவாறு; நெறி உய்ப்பவர் - நல்வழியிலே செலுத்தும் பாகர்கள்; உரைத்த - தெரிவித்த; குறி - குறிப்பு மொழிகளை; கொள்ளா - ஏற்றுக் கொள்ளாதனவும்; பக்கம் - இரு பக்கங்களிலும்; இனம் மொய்த்து - துணைப் பாகர்கள் கூடியிருந்து; அயல் அலைக்க - (வேற்றிடம் செல்ல வொட்டாமல்) வருந்தித் தடுக்கவும்; நனி பாரா - சிறிதும் பொருட்படுத்தாதனவாய்; புனல் சிறைகள் ஏறா - நீர்நிலைகளிலிருந்து கரை ஏறாதனவுமான; மதத்த மைக்கரி - மதத்தையுடைய கரிய யானைகள்; ஒக்க நெறி உய்ப்பவர் - தகுதியாக நல்வழியிலே செலுத்துகின்ற பெரியவர்; உரைத்த குறி கொள்ளா - கூறும் நன்மொழிகளைக் கேளாமலும்; பக்கம் இனம் - சுற்றத்தாரும் நண்பரும்; மொய்த்து அயல் அலைக்க - கூட்டமாகத் திரளும் அயலவரும் இடித்துக் கூறவும்; நனி பாரா - (அவற்றை) கருத்தில் கொள்ளாமலும்; விலைமாதர் கலை அல்குல் - வேசியரின் மேகலையணிந்த அல்குலிலே; புக்கவரை - ஈடுபட்டு அழுந்திய காமுகரை; ஒத்தன - ஒத்து விளங்கின.

நன்னெறி உய்ப்பவரின் குறிகளைக் கொள்ளாமலும் பக்கம் இனம் அயல் அலைக்கவும் பாராமலும் நீர்நிலைகளில் (சிறை) அழுந்துவதால் மதயானைக்குக் காமுகரை உவமை கூறினார். கலை - மேகலை என்பதன் முதற்குறை. கொள்ளா, பாரா, ஏறா - வினையாலணையும் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not heeding the signals called out by those who guide them on the right path,
  2. paying no heed at all though their fellows on either side and others round about scold them,
  3. the dark elephants in rut were like men who have sunk into
  4. the girdled loins of women who sell themselves: they would not climb out of the water's banks.

What the poem says

Elephants in rut go into the lakes and refuse to come out. They ignore their drivers' commands and the shouts of the helpers crowding around them.

The poet compares them to men infatuated with courtesans. Such men will not listen to the good advice of those who would guide them, and they ignore the rebukes of family, friends and neighbours, staying sunk in their passion. The words of the verse fit both cases at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1okka neṟi uyppavar uraitta kuṟi koḷḷā,
pakkam iṉam otta ayal alaikka naṉi pārā,
maik kari matatta, vilai mātar kalai alkul
pukkavarai ottaṉa, puṉal ciṟaikaḷ ēṟā.