கம்பராமாயணம் 913 · பால 14.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துகில் இடை மடந்தையரொடு - ஆடையணிந்த இடையையுடைய மகளிரோடு; ஆடவர் துவன்றி - ஆண்கள் நெருங்கி; பகல் இடைய - கதிரவன் ஒளியும் மழுங்கும்படி; அட்டிலில் மடுத்து - மடைப்பள்ளியிலிருந்து கொண்டு வந்த, எரி - நெருப்பிலே; பரப்பும் அகில் - பரப்பிய அகிற் கட்டைகளில்; இடு கொழும்புகை - உண்டாகிய மிகுதியான புகை; அழுங்கலின் - நெருங்குவதால்; முழங்கா - இடி இடிக்காத; முகில் - மேகங்கள்; படு நெடுங்கடலை - தங்கிய பெரிய கடலை; அம் மூதூர் - (அவர்கள் தங்கிய) பழைய நகர்; ஒத்துளது - ஒத்துள்ளது.
அகில்புகை மிகுதியாகத் தங்கிய அந்த இடத்திற்கு முகில்படுதல் உவமையாயிற்று. அந்த இடத்தின் பரப்பும், அங்குள்ளவர் எழுப்பிய அகிற் புகையின் மிகுதியும் வருணனையில் புலப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Men thronging together with women whose waists are wrapped in fine cloth,
- so that the daylight dimmed, taking fire from the kitchens they spread it over
- aloe wood, and its thick fragrant smoke hung heavy; so that ancient town
- was like the long sea where clouds settle without thundering.
What the poem says
The camp is so large it is called an "ancient town". Men and women crowd together and burn fragrant aloe wood, lit with fire brought from the cooking hearths. The smoke is so thick that it dims the daylight.
The camp under its pall of smoke looks like the wide sea with heavy clouds resting on it, clouds that do not thunder. The image shows both how big the camp is and how much incense is burning.