கம்பராமாயணம் 915 · பால 14.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முன்னம் துயில் உணர் - (விழித்தெழும் நேரத்திற்கு) சிறிது முன்பே உறக்கம் நீங்கிய; செவ்வியோரும் - அழகு உடையவரும்; துனி உறு முனிவினோரும் - நீண்ட ஊடலால் அமைந்த கோபத்தையுடையவருமான; மகளிர் எல்லாம் - மங்கையர் யாவரும்; குயிலொடும் இனிது பேசி - குயில்களோடு இனிமையாகப் பேசியும்; சிலம்பொடும் இனிது கூவி - மலை எதிரொலிக்க நன்றாகக் கூவியும்; வெயில் நிறம் குறைய - கதிரவன் ஒளியும் தமக்கு முன்னே ஒளி மழுங்குமாறு; சோதி - அணிகலன்களின் ஒளி; மின்நிழல் பரப்ப - மின்னலைப் போன்ற ஒளியைப் பரப்ப; மயில் இனம் திரிவ என்ன - (கண்டவர்) மயில்களின் கூட்டம் திரிவன என்று கருதுமாறு; திரிந்தனர் - திரிந்தார்கள்.
சிலம்போடு இனிது கூவி எதிரொலியுண்டாக்கி மகிழ்தல் மலைவாழ் மகளிர்க்கு வழக்கமாகும். சிலம்பொடும் இனிது கூவி - தாம் நடக்கும்போது ஒலிக்கின்ற சிலம்பு என்னும் அணியுடனே இனிதாக ஒலி செய்து என்று கூறுவதுண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the sunlight's colour paled, the radiance of their jewels spreading a lightning glow,
- those lovely ones who had woken early, and those in a sulking temper from a lovers' quarrel,
- chatting sweetly with the cuckoos, calling sweetly to the echoing hills,
- all the women roamed about as if flocks of peacocks were wandering.
What the poem says
The women of the camp wander over the hillside. Some are bright after rising early, and some are still sulking from a lovers' quarrel. Their jewels flash like lightning and outshine the sun.
They chat with the cuckoos and call out to hear the hills echo back, a favourite pastime of hill women. Some take the phrase to mean that they "call sweetly with their anklets", whose bells ring as they walk. To anyone watching they look like a flock of peacocks.