கம்பராமாயணம் 916 · பால 14.30

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மைந்தர் எல்லாம் - வீரர்களான ஆடவர் யாவரும்; தாள் இணை கழல்கள் ஆர்ப்ப - (தம்) இரண்டு அடிகளிலும் வீரக் கழல்கள் ஆரவாரிக்கவும்; தார் இடை அளிகள் ஆர்ப்ப - (தாம் அணிந்த) மலர் மாலைகளில் (தேனைப் பருகும்படி) வண்டும் ஆரவாரம் செய்து மொய்க்கவும்; வாள்புடை இலங்க - வாளாயுதங்கள் இடையிலே விளங்கவும்; செங்கேழ் மணி - செந்நிறமுள்ள இரத்தினங்கள்; அணி வலயம் மின்ன - பதித்துச் செய்யப்பட்ட அழகிய தோள் வலயங்கள் ஒளி விடவும்; தோள் என உயர்ந்த - (தம்) தோள்களைப் போல உயர்ந்த; குன்றின் சூழல்கள் - அம் மலையின் சுற்றுப்பக்கங்களை; இனிது நோக்கி - நன்றாகப் பார்த்தவண்ணம்; வாள் அரி திரிவ என்ன - கொடிய சிங்கங்கள் திரிவன போல; திரிந்தனர் - உலாவினார்கள்.

தோளென உயர்ந்த குன்று - எதிர் நிலையணி. ஆடவர் மலையின் சுற்றுப் பக்கங்களைக் காணுமாறு சஞ்சரித்தனர் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With warrior anklets ringing on both their feet, with bees humming in their garlands,
  2. swords gleaming at their sides, armlets set with red gems flashing,
  3. gazing with delight at the slopes of the hill that rose as high as their shoulders,
  4. all the young men roamed about as if fierce lions were wandering.

What the poem says

The young men of the army also explore the mountain. Their warrior anklets ring, bees buzz around their garlands, and their swords and jewelled armlets glitter. They prowl the slopes like lions.

The poet reverses the usual comparison. Normally a hero's shoulders are said to be as high as a hill. Here the hill is said to be as high as the heroes' shoulders.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷ iṇai kaḻalkaḷ ārppat, tār iṭai aḷikaḷ ārppa,
vāḷ puṭai ilaṅkac, ceṅ kēḻ maṇi aṇi valayam miṉṉat,
tōḷ eṉa uyarnta kuṉṟiṉ cūḻalkaḷ iṉitu nōkki,
vāḷ ari tiriva eṉṉat tirintaṉar maintar ellām.