கம்பராமாயணம் 917 · பால 14.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுற்றிய கடல்கள் எல்லாம் - (உலகத்தை) சூழ்ந்துள்ள கடல்கள் யாவும்; சுடர் மணிக் கனகக் குன்றை - ஒளிவிடும் மணிகளைக் கொண்ட மேருமலையை, பற்றிய - கவர்ந்து கொள்ளும் பொருட்டு; வளைந்த என்ன - வளைத்துக் கொண்டன என்று சொல்லும்படி; சேனை பரந்து வந்து - (அம் மலை இடங்களில்) அந்தச் சேனைகள் பரவி வந்து; இறுத்த - தங்கின; கொற்றவர் தேவிமார்கள் - அரசர்களும் அவ்வரசரின் மனைவியரும்; மைந்தர்கள் கொம்பு அனார் - அரசிளங்குமரரும் பூங் கொம்பு போன்ற இளவரசியரும் ஆகிய, வந்து உற்றவர் - (அங்கு) வந்து சேர்ந்தவர்கள்; காணலுற்ற மலை - காண்பதற்கு அமைந்த அச் சந்திரசயிலத்தின்; நிலை உரைத்தும் - தன்மையை இனிச் சொல்லுவோம். மலையைச் சுற்றிய அடிவாரங்களில் சேனை தங்கியது மேரு மலையைக் கவருமாறு நாற்கடல்களும் வளைத்துள்ளன போலும் என்றார் - தற்குறிப்பேற்ற உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if all the encircling seas had closed around the golden mountain of shining gems
- to seize it, the army spread out, came and encamped;
- now the kings, the queens, the princes and the princesses slender as boughs came,
- and we shall tell of the mountain those who arrived set out to see.
What the poem says
The army has spread out around the foot of the Moon Mountain. It looks as though all the oceans that ring the world had closed in around golden Mount Mēru to capture it.
The poet now turns to describe the mountain itself, as the kings, queens, princes and princesses set out to look at it.