கம்பராமாயணம் 918 · பால 14.32

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பம்பு தேன், மிஞிறு, தும்பி, பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானம் அத்து நின்ற ஒளி தரு தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டிக், குழையொடும் ஒடித்துக், கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன துணை மடப் பிடிக்கு நல்கும்.

பொருள் · Meaning in Tamil

கோட்டுத் தும்பிகள் - தந்தங்களையுடைய ஆண் யானைகள்; பம்புதேன் மிஞிறு தும்பி - நெருங்கிய தேனில் மொய்க்கின்ற மிஞிறுகளும், தும்பிகளும்; பரந்து இசைபாடி - பரவிப் பண்களைப் பாடிக்கொண்டு; ஆடும் உம்பர் வானகத்து - ஆடுதற்கு இடனான மேலிடமாகிய வானுலகத்திலே; நின்ற ஒளிதரு தருவின் - உள்ள ஒளிவிடும் கற்பகத் தருவினுடைய; ஓங்கும் கொம்புகள் - உயர்ந்த கிளைகளை; பனைக் கை நீட்டி - (தம்) பனைமரம் போன்ற கைகளை நீட்டி; குழையொடும் ஒடித்து - தளிர்களோடும் முறித்து; உயிரே அன்ன - (தம்) உயிரையொத்த; துணை மடப்பிடிக்கு - மடப்பத்தையுடைய பெண் யானைக்கு; நல்கும் - கொடுக்கும்.

மிஞிறு, தும்பி: வண்டின் இனங்கள். மிஞிறு: வரி வண்டு. தும்பி: கருவண்டு. ஆண்யானை கற்பகத் தருவின் கிளைகளைத் தமது மடப்பிடிக்குக் கொடுக்குமென்றது - தொடர்புயர்வு நவிற்சியணி. இம்மலை மிக ஓங்கியுள்ளது. இங்கு இருந்தபடியே சொர்க்கத்தை அணுகலாம் என்பது பெறப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Where clustering honey-bees, striped bees and black bees spread about singing and dancing,
  2. of the radiant tree that stands in the heaven above, the soaring
  3. boughs, stretching out trunks like palm trees, they break off with their young leaves, and the tusked
  4. bull elephants give them to the gentle cow mates who are like their very lives.

What the poem says

The Moon Mountain is so high that its elephants can reach up into heaven. The tusked bulls stretch out their trunks, thick as palm trunks, and break off branches from the wishing-tree of the gods, where the bees sing and dance. They give these to their mates as gifts.

This is hyperbole, meant to show that from the summit one could almost touch the world of the gods.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pampu tēṉ, miñiṟu, tumpi, parantu icai pāṭi āṭa
umpar vāṉakattu niṉṟa oḷi vaḷar taruviṉ ōṅkum
kompukaḷ, paṉaik kai nīṭṭik, kuḻaiyoṭum oṭittuk, kōṭṭut
tumpikaḷ, uyirē aṉṉa tuṇai maṭap piṭikku nalkum.