கம்பராமாயணம் 919 · பால 14.33

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண்மலர் பவளச் செவ்வாய் - பண்ணிசை தோற்றும் பவளம் போன்ற செவ்வாயினையும்; பனிக்குவளை மலர் அன்ன - குளிர்ந்த குவளை மலர் போன்ற; கண் மலர் - கண்களையும் பெற்ற முகத்தாமரையையுடைய; கொடிச்சிமார்க்கு - குறிஞ்சிநிலப் பெண்களுக்கு; கணித் தொழில் புரியும் - சோதிடத் தொழில் புரிந்துவரும்; வேங்கை உண்மலர் - வேங்கை மரத்தின் தேனையுண்ட மலர்களின் மேல்; வெறுத்த தும்பி - வெறுப்புற்ற கருவண்டுகள்; புதிய தேன் உதவும் - புதிய தேனைத் தருகின்ற; நாகம் தண் மலரென்று - சுரபுன்னை மலரென்று கருதி; வானத் தாரகை - விண்ணிலே விளங்குகின்ற நட்சத்திரங்களின் மேல்; தாவும் - தாவுகின்றன.

வேங்கை நன்னாளில் மலர்தலும், அந்த நாளில் மலைமகளிர் மணம் புரிதலும், அது பூத்தபோது மகளிர் தினைப் புனங் கொய்யத் தொடங்குதலும் வழக்காதலின் அவ் வேங்கை சோதிடரை ஒப்பதாயிற்று. மலரின் தேனைக் குடித்ததால் தேன் நீங்கிய அந்த வேங்கை மலரை வெறுத்தது தும்பி; பின் வானத்திலே விளங்கும் விண்மீன்களைக் கண்டு அவற்றைச் சுரபுன்னை மலராக மயங்கி அவற்றின்மேல் தாவியது என்றார். மயக்கவணியை அங்கமாகக் கொண்டு வந்த தொடர்புயர்வு நவிற்சியணி. கணி: முகூர்த்தம் அறிவிப்பவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For the hill women, whose coral-red mouths bring forth song and whose flower-eyes
  2. are like cool blue water lilies, the vēṅkai tree serves as astrologer; tired of
  3. its drained flowers, the black bees, taking them for cool nākam blossoms
  4. that offer fresh honey, leap onto the stars of the sky.

What the poem says

On this mountain the vēṅkai tree acts as the hill people's astrologer. It was believed to blossom on an auspicious day. The hill women married on that day and began harvesting the millet fields when it flowered, so the tree in effect announces the right time.

Black bees have drunk all the honey from the vēṅkai flowers and grown tired of them. Mistaking the stars for fresh nākam flowers full of nectar, they leap up onto them. The mistake is used to show how high the mountain is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇ malar pavaḷac cev vāyp paṉi malark kuvaḷai aṉṉa,
kaṇ malark, koṭiccimārkkuk kaṇit toḻil puriyum vēṅkai
uṇ malar veṟutta tumpi, putiya tēṉ utavum nākat
taṇ malar eṉṟu vāṉat tārakai tāvum aṉṟē.