கம்பராமாயணம் 920 · பால 14.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீன் எனும் பிடிகளோடும் - நட்சத்திரங்களாகிய (தன்) பெண் யானைகளுடனே; விளங்கு வெண்மதி - விளங்கும் வெண்ணிறமுள்ள சந்திரனாகிய; நல்வேழம் - சிறந்த யானை; கூன் நல் வான்கோடு - வளைவும் அழகுள்ள வெண்கொம்புகளை; நீட்டிக் குத்திட - நீட்டிக் குத்தியதனால் (அவற்றிலிருந்து); குமுறிப் பாயும் தேன் - பேரொலியோடு பாய்கின்ற தேனினது; உகு மடையை மாற்றி - பாய்கின்ற மடையைத் தடுத்து; செந்தினைக் குறவர் - செந்தினைக் கொல்லைகளையுடைய மலைக் குறவர்கள்; முந்தி வானம் ஆறு - விரைவாக ஆகாய கங்கையின்; நீர்பாய்ச்சி - நீரைப் பாயச் செய்து; ஐவனம் வளர்ப்பர் - மலை நெல்லை வளரச் செய்வார்கள்.
தேன் வெள்ளத்தால் தினை விளைவதற்கு முன் அதனைத் தடுத்து உலர்ந்த ஐவன நெல்லை ஆற்றுநீர் கொண்டு மலைக் குறவர் மாற்றி விளைத்தனர் என்பது - தொடர்புயர்வு நவிற்சியணி. இவ் வருணனையால் மலையின் ஓங்கிய தன்மையும், மலைவளனும் பெறப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the fine elephant, the bright white moon, with its cow elephants, the stars,
- stretches out its curved white tusks and gores the hives,
- the Kuṟavar of the red millet fields block the channels where the honey gushes roaring,
- and quickly let in the water of the sky's river to grow their hill rice.
What the poem says
Another hyperbole about the height of the mountain. The moon is pictured as an elephant moving among the stars, its mates. As it passes the summit, its curved white "tusks" pierce the great honeycombs hanging there, and honey pours down in roaring streams.
The Kuṟavar, the hill tribe who farm the slopes, block the channels where the honey flows and instead turn in the water of the heavenly Ganges to irrigate their hill rice, called aivaṉam.