கம்பராமாயணம் 921 · பால 14.35

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குப்புறற்கு அருமையால் அக் குலம் வரை சாரல் வைகி
ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண்,
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம்,
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாது ஓ.

பொருள் · Meaning in Tamil

(ஓங்கியுள்ள அந்த மலை) குப்புறற்கு - கடந்து செல்வதற்கு முடியாததால்; அக் குல வரைச் சாரல் வைகி - ஓங்கிய அம் மலையின் சாரலிடத்தில் தங்கி; ஒப்புறத் துளங்குகின்ற - (இரு புறமும்) ஒரே தன்மைத்தாக விளங்குகின்ற; உடுபதி ஆடியின்கண் - சந்திரனாகிய கண்ணாடியிலே; குறத்தியர் இயைந்த - மலை மகளிர் தன் மனத்திற்கு ஏற்றவாறு அணிந்த; கோலம் இப்புறத்தும் - கோலங்களை (நிலவுலகமான) இந்தப் பக்கத்திலும்; காண்பார் - காண்பார்கள்; அரம்பையர் அழகு - வானுலகத் தெய்வ மகளிர் (தாம் புனைந்த) அலங்காரத்தை, அப் புறத்தும் காண்பார் - (வானுலகமான) அந்தப் பக்கத்திலும் காண்பார்கள்.

சந்திரனை அப்பாலே செல்லவொட்டாமல் ஓங்கி இம்மலை தடுத்துள்ளது. அதனால் சந்திரன் இம் மலைச் சாரலிலேயே தங்கினான். அவ்வாறு தங்கிய சந்திரன் ஒரு புறம் மலைக் குறத்தியர் தமது கோலத்தைக் காண்பதற்கு உதவியது. மற்றொரு புறம் வானுலக மகளிர் தமது கோலத்தைக் காண்பதற்கும் பயன்படுவதாயிற்று என்பது - தொடர்புயர்வு நவிற்சியணி. உடுபதியாகிய கண்ணாடி (சந்திரன்) நாம் காணும் கண்ணாடி போன்றதாக அமையாமல் இருபக்கமும் பார்க்குமாறு அமைந்தது - வேற்றுமையணி. உடுபதி: சந்திரன். சந்திரன் சாரலில் தங்கும் சயிலம் ஆதலின் சந்திர சயிலம் ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to get past it, the moon lingers on the slopes of that great mountain,
  2. and in that mirror, the lord of the stars, which shines alike on both its faces,
  3. on this side the hill women see the finery they have put on,
  4. and on that side the heavenly nymphs see their own beauty.

What the poem says

The mountain is so tall that the moon cannot pass over it and has to stop on its slopes. That is how it got the name Moon Mountain.

Stuck there, the moon serves as a mirror with two faces. On the earthly side the hill women check their make-up in it, and on the heavenly side the nymphs of the gods do the same. Unlike an ordinary mirror, which reflects on only one side, this one works both ways.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuppuṟaṟku arumaiyāṉa kula varaic cāral vaiki
oppuṟat tuḷaṅkukiṉṟa uṭupati āṭiyiṉkaṇ,
ip puṟattēyum kāṇpār kuṟattiyar iyainta kōlam,
ap puṟattēyum kāṇpār arampaiyar aḻaku mātō.