கம்பராமாயணம் 922 · பால 14.36

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உதி உறு துருத்தி - காற்று உண்டாக்கும் உலைத் துருத்தியால்; ஊதும் உலை உறும் தீயும் - ஊதப்படும் கொல்லனது உலைக்களத்தில் பொருந்திய நெருப்பையும்; வாயின் அதி விட நீரும் - ஆயுத அலகிலே ஊட்டப்பெற்ற கொடிய நச்சு நீரையும்; நெய்யும் உண்கிலாது - நெய்யையும் கொள்ளாமலே; ஆவி உண்ணும் - (காதலித்த ஆடவரின்) உயிரைப் பறிக்கவல்ல; கொதி நுனை வேல்கண் - கொதிக்கும் முனையுள்ள வேலைப் போன்ற கண்களையுடைய மாதர் குறத்தியர் நுதலினோடு - அழகிய மலை மகளிரின் நெற்றியோடு; குறவர் மதியினை வாங்கி - குறவர்கள் (அம் மலை மேல் செல்லமுடியாத) சந்திரனை எடுத்து; ஒப்புக் காண்குவர் - ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

குறவர்கள் அருகிலுள்ள பிறைச் சந்திரனைப் பிடித்துத் தம் மனைவியரின் நெற்றியோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒற்றுமை காண்பார்கள் என்பது - தொடர்புயர்வு நவிற்சியணி. வேலைக் கூர்மைப்படுத்த கொல்லனது உலைக் களத்தில் காய்ச்சியடிக்கப் பெறுகிறது. துருப்பிடியாமலிருக்க நெய் பூசப்படுகிறது. பகைவரது உயிரைக் கொள்ள நஞ்சு தீற்றப்படுகிறது. இத்தகு இயல்புகளோடு கூடிப் பகைவரது உயிரையுண்ணும் வேலைப் போல, இந்தக் கண்ணாகிய வேல் எந்தச் செயலும் வேண்டாமல் ஆடவரது உயிரை உண்ணவல்லதென்று வேறுபாடு காட்டியது - வேற்றுமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Without taking in the fire of the forge blown by the wind-making bellows,
  2. or the deadly poison smeared on the blade, or ghee, yet they devour lives:
  3. with the brows of their hill women, whose eyes are spears with burning points,
  4. the Kuṟavar take down the moon and compare it.

What the poem says

Because the moon is stuck on the slopes, the hill men can reach up, take hold of the crescent and hold it beside their wives' foreheads to see whether it matches. A crescent moon is the classic comparison for a woman's brow.

The women's eyes are spears, but different from real ones. A real spear needs to be heated in the forge, smeared with ghee against rust and dipped in poison before it can kill. These eyes need none of that, yet they take the lives of men who love them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uti uṟu turutti ūtum ulai uṟu tīyum, vāyiṉ
ati viṭa nīrum, neyyum, uṇkilātu, āvi uṇṇum
koti nuṉai vēl kaṇ mātar kuṟattiyar nutaliṉōṭu,
matiyiṉai vāṅki oppuk kāṇkuvar kuṟavar maṉṉō!