கம்பராமாயணம் 9186 · யுத்த 27.19

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் இருள் பகல் உறவரு பகை இரதம் - அந்த இரவு இருள் பகலாகப் பொருந்துமாறு ஒளியுடன் வருகின்ற பகைவனுடைய இரதம்; எதிர் கவிகுலமும் குடல் மறுகிட - எதிர்க்கின்ற குரக்கினங்கள் குடல் கலங்கவும்; கடல் மறுகிட, உலகு உலைய நெடுங்கரி இரிதர - கடல் கலங்கவும், உலகம் வருந்தவும், நெடிய திசை யானைகள் அஞ்சி ஓடவும்; மலை குலைய நிலம் குழியொடு கிழிபட - அட்ட குலமலைகள் குலுங்கவும், நிலம் குழியாதலொடு கிழிபடவும்; வழிபடரும் இடம் மறுகிய பொடி முடுகிடவும் - செல்லுகின்ற வழியாகிய இடம் கலங்கியதாலாய புழுதி விண்ணில் விரைந்து செல்லவும், இருள் உளது என எழும் இகல் அரவின் படம் மறுகிட எதிர் விரவியது - இருள் உளது என்று கண்டோர் கருதுமாறு நஞ்சினைக் கக்கிக்கொண்டு மேல் எழுகின்ற வலிமையுள்ள ஆதி சேடனுடைய படம் வருந்தவும் இலக்குவனுக்கு எதிரே வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the sea churned, the world shuddered, the great elephants fled, and the monkey host facing it
  2. had their bowels churn, as the mountains shook, the ground was torn into pits, and on the path it took
  3. the dust stirred up rushed skyward, and the hoods of the hostile serpent, rising as if there were darkness,
  4. were tormented — the enemy chariot, turning that night's darkness to day, came on to meet them.

What the poem says

Intiracittu's chariot blazes so brightly that it turns the darkness of night into day as it charges towards Ilakkuvaṉ.

The sea heaves, the world shakes, and the elephants that hold up the quarters flee. The monkeys' stomachs churn with fear, the great mountains tremble, the earth is gouged into pits, and dust flies skyward. Even Ātiśēṣaṉ, the serpent who holds up the world, rears his hoods and spits venom in distress.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭal maṟukiṭa, ulaku ulaiya, neṭuṅ kari iritara, etir kavi kulamum
kuṭal maṟukiṭa, malai kulaiya, nilam kuḻiyoṭu kiḻipaṭa, vaḻi paṭarum
iṭam maṟukiya poṭi muṭukiṭavum, iruḷ uḷatu eṉa eḻum ikal araviṉ
paṭam maṟukiṭa, etir viraviyatu av iruḷ pakal uṟa varu pakai iratam.