கம்பராமாயணம் 9185 · யுத்த 27.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திரிபுவனமும் உறுதனி இரதம் - மூன்று உலகங்களிலும் திரிந்த (இந்திரசித்தன் ஒப்பற்ற தேர்; இடை குன்று நெரிதர, பொன் திணி கொடியினது - வழியிலுள்ள குன்றுகள் எல்லாம் பொடிப் பொடியாய் நெரிந்து போகுமாறும் பொன்னால் நிரப்பப் பெற்ற கொடிகளை உடைய; வடவரையின் குவடு உருள்குவதென - வடதிசை உள்ள மேருமலையின் சிகரமொன்று உருளுகின்றது என்று சொல்லுமாறும்; முடுகு தொறும் இடி உருமின் அதிர்குரல் முரல்வது - விரைந்து செல்லும் தோறும் பேரிடியின் முழங்குகின்ற குரலை எழுப்புவதாய் இருந்தது; புனை மணியின் மின் திரள் சுடரது - அலங்கரிக்கப் பெற்ற இரத்தினங்களின் மின்னலை ஒத்த ஒளித் திரள்களான ஒளியை வீசுவது; உலகு இரிய திசை திசை - உலகம் அஞ்சி ஓடும்படி பல திசைகளிலும்; கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது எனச் சென்றது - கடல் நீரை மிகாமற் பருகும் இயல்பினை உடைய வடவைக்கனல் (அக்கடலை விட்டு) வெளியிலே வருகின்றது என்று சொல்லுமாறு ஓடிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Crushing the hills on its way, as if a peak of the northern mountain were rolling, each time it sped on,
- with banners thick with gold, roaring with the crashing voice of thunderbolts,
- blazing with lightning-clusters of its studded gems, as if the submarine fire that drinks the sea
- were coming out into the open, it went — the peerless chariot that ranged the three worlds — so that worlds fled in every direction.
What the poem says
The metre changes to a long, rushing line to match the charge of Intiracittu's chariot, which has travelled through all three worlds.
It grinds the hills in its path to dust and looks like a peak of Mount Mēru rolling down. Its gold banners stream, it roars like thunder, and its jewels flash like lightning. It is like the submarine fire that keeps the ocean from overflowing, bursting out of the sea, and everywhere the world flees before it.