கம்பராமாயணம் 9184 · யுத்த 27.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏயினன் இன்னன் ஆக - (போர்க்களத்தை விட்டு) ஏகியவனாகிய இந்திரசித்து இத்தன்மையனாக; இலக்குவன், எடுத்த வில்லான் சேய் இருவிசும்பை நோக்கி - இலக்குவன் கையில் எடுத்த வில்லை உடையவனாய் சேய்மைத்தாகிய அகன்ற ஆகாயத்தை நோக்கிக்கொண்டு; “வீடண! தீயோன் அப்பால் போயினன் ஆதல் வேண்டும்; புரிந்திலன் ஒன்றும்” என்பான் - “வீடணா! தீயவனாகிய இந்திரசித்து அப்பாற் போயிருத்தல் வேண்டும் (மாயம்) ஒன்றும் செய்திலனே! என்று (வீடணனிடம்) கூறிக் கொண்டிருக்கையில்; ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் - ஆயிரம் குதிரைகள் கட்டிய தேரின் பெரிய முழக்கத்தைக் கேட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While he who had gone was doing all this, Ilakkuvaṉ, bow in hand,
- looking up at the vast far-off sky, said, 'Vīṭaṇā! The wicked one
- must have gone away somewhere; he has done nothing'; and as he spoke
- he heard the great roar of a chariot drawn by a thousand horses.
What the poem says
Back on the battlefield, Ilakkuvaṉ stands with bow raised, scanning the sky. He tells Vīṭaṇaṉ that Intiracittu must have gone away altogether, since there has been no sign of any trick from him.
Just then he hears the thunder of a chariot drawn by a thousand horses: Intiracittu is returning.