கம்பராமாயணம் 9188 · யுத்த 27.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீடணன் அமலனை - வீடணன், தூயவனாகிய இலக்குவனை நோக்கி; விறல் கெழுபோர் விடலையை இனி இடை விடல் உளதேல் - “வெற்றி பொருந்திய போராற்றல் மிக்கவனாகிய இந்திரசித்தனை இனி போரின் இடையே கொல்லாமல் (முன் போல் மறைய) விடுதல் உண்டாகுமாயின்; துறுமலர் வாகை சூடலை எனத் தொழுதனன் - நீ நெருங்கிய மலர்களை உடைய வாகை மாலையை (வெற்றியை) சூட மாட்டாய்” எனக் கூறித் தொழுதானாக; அழகனும் அவ்வளவில் அக்கோடு அணை வரி சிலை - அழகனாகிய இலக்குவனும் அவ்வளவில் அந்தப் பெரு முழக்கத்தையுடைய கட்டமைந்த வில்லில்; உலகு உலைய குலவரை பிதிர்பட நிலவரையில் சேடனும் வெருவுற - உலகெல்லாம் வருந்துமாறும், பெரும் மலைகள் பிதிர்பட்டு உதிரவும், நிலத்தின் அடியிலுள்ள ஆதிசேடனும் அஞ்சுதல் செய்யவும்; உரும் உறழ் திண் தெறுகணை முறை முறை சிதறினனால் - இடியை ஒத்த திண்ணிய அழித்தல் தன்மை பொருந்திய அம்புகளை முறை முறையாகக் கோத்து எய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vīṭaṇaṉ said to the spotless one, 'If you let this mighty warrior slip away again in the middle of the fight,
- you will not wear the close-packed flowers of the vākai,' and joined his palms; at that the handsome one
- from his banded bow with curved horns, so that the world shuddered, the great mountains shattered, and on the earth
- even Cēṭaṉ was afraid, scattered strong destroying arrows like thunder, volley upon volley.
What the poem says
Vīṭaṇaṉ joins his palms and urges Ilakkuvaṉ not to let Intiracittu slip away again in the middle of the fight, as he did before. If he does, he will not wear the garland of vākai flowers, the traditional sign of victory.
Ilakkuvaṉ responds by firing volley after volley of thunderbolt arrows from his great bow. The world quakes, the great mountains crack, and Cēṭaṉ (Ātiśēṣaṉ), the serpent beneath the earth, trembles.