கம்பராமாயணம் 9189 · யுத்த 27.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அயில் முகவாய் அடுகணை ஆயிர அளவின அவன் விட இவன் விட - அவ்வமையம் அனல் சிந்தும் முனையை உடையவாய்க் கொல்லுகின்ற அம்புகளை அவ்விந்திரசித்து விடவும், அவனுக்கு எதிரே இலக்குவன் விடவும்; அத்தீயினும் எரிவன உயிர் பருக, சிதறின கவிகளொடு இன நிருதர் - அந்தத் தீயினும் மிக்கு எரிவனவாய் உயிரைப் பருகுதலால், சிதறுண்ட வானரங்களோடு கூட்டமான அரக்கர்கள் (ஆற்றாமல்) போயின போயின திசை நிறையப் புரள்பவர் முடிவு இலர் - சென்ற சென்ற திசைகள் நிறையுமாறு புரள்கின்றவர்கள் எண்ணற்றவராயினர் பொருதிறலோர் எரிகணை சொரிவன இரு மழை போல் ஒருவரை ஒருவர் குறித்து ஏயினர் - போராற்றல் மிக்க இந்திர சித்தும் இலக்குவனும் தீ அம்புகளையே சொரிகின்ற இரண்டுமே மேகங்களைப் போல ஒருவரை ஒருவர் குறித்து அம்புகளை ஏவினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As that one loosed and this one loosed killing arrows with sharp points by the thousand,
- burning more than fire itself, drinking lives, monkeys were scattered along with throngs of Rākṣasas;
- those who rolled about filling every quarter they went to had no end;
- the mighty fighters shot at one another like two clouds raining fiery arrows.
What the poem says
Intiracittu and Ilakkuvaṉ each fire arrows by the thousand, sharper and hotter than fire, and they take lives on both sides. Monkeys and Rākṣasas alike are scattered, and their numberless bodies roll across the field in every direction.
The two champions keep aiming at each other like two storm clouds raining fire.