கம்பராமாயணம் 92 · பால 3.11

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித்தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்கு அரும் காவலின், வலியின்,
வேலொடு வாள் வில் பயிற்றலின்,வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தில்,
சால்பு உடை உயர்வில், சக்கரம் நடத்தும் தன்மையில், தலைவர் ஒத்து உளதே.

பொருள் · Meaning in Tamil

கோலிடை உலகம் அளத்தலின் - செங்கோலால் உலகத்தைக் காப்பதாலும் (அளவுகோலால் அளக்கப்படுதலாலும்); பகைஞர் முடித்தலை கோடலின் - பகை மன்னரின் மகுடமணிந்த தலைகளை அழிப்பதாலும் (தன்னிடமுள்ள இயந்திரங்களால் பகைவர் தலைகளைத் துணிப்பதாலும்); மனுவின் நூல்நெறி நடக்கும் செவ்வையின் - மனுநூல் நெறிப்படி நடக்கின்ற நேர்மையாலும் (சிற்பநூலின்படி அமைந்து நேராயிருப்பதாலும்); யார்க்கும் நோக்க அரும் காவலின் - எவருக்கும் பார்க்க இயலாதபடி காக்கும் திறமையாலும் (எளிதில் எவரும் காண இயலாத காவல் உடையதாலும்); வலியின் வேலொடு வாள்வில் பயிற்றலின் - வலிமை மிக்க வேல் முதலிய படைக்கலப்பயிற்சி உடைமையாலும் (வீரர்கள் வேல் முதலிய படைக் கலங்களைப் பயில்வதாலும்); வெய்ய சூழ்ச்சியின் - கொடிய தந்திரம் கொண்டிருப்பதாலும்; வெலற்கருவலத்தின் - மற்றவர்களால் வெல்ல இயலாத வல்லமை உடையதாலும்; சால்புடை உயர்வின் - சிறப்பு மிக்க உயர்வுடைமையாலும்; சக்கரம் நடத்தும் தன்மையின் - ஆணை செலுத்தும் தன்மையாலும்; தலைவர் ஒத்து உளது - அந்த மதில் (சூரிய குலத்) தலைவர்களை ஒத்து இருக்கிறது.

சூரிய குலத்துத் தலைவர்களுக்கும், மதிலுக்கும் சிலேடை மூலமாக உவமை கூறியிருப்பதால் சிலேடை உவமையணியாகும். சால்புடை உயர்வு: உயரத்துக்கு இடமில்லை என்னும்படி உயர்தல். மனுநூல் நெறி நடத்தல் மன்னருக்குரியது. 'மனு' என்ற சிற்ப நூல் வல்லாரின் நெறிப்படி அமைதல் மதிலுக்கு உரியது. வெய்ய சூழ்ச்சி: வெளியோர் எளிதில் நுழைய இயலாத வாயில் முதலியவைகளைக் கொண்டிருப்பதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Measuring out the world by the rod, taking the crowned heads of its foes, keeping to
  2. the path of Maṉu's book in uprightness, with a guard no one can see past, with its strength,
  3. with its practice of spear and sword and bow, its fierce devices, its might that none can overcome,
  4. its noble height, and its way of making the wheel of rule turn: in all this it is like the kings.

What the poem says

Every phrase in this verse fits both the city wall and the great kings of the Solar line, so the wall is likened to them. The kings rule the world by the sceptre, while the wall was laid out with the measuring rod. The kings strike off the crowned heads of enemies, and the wall's machines do the same. The kings follow the law book of Maṉu, and the wall stands true by the architectural treatise of the same name. Both have guards no one can slip past and warriors trained in spear, sword and bow. Both are full of formidable devices, the wall's being its hidden gates. Both are unconquerable and lofty, and both enforce their command.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōliṭai ulakam aḷattaliṉ, pakaiñar muṭit talai kōṭaliṉ, maṉuviṉ
nūl neṟi naṭakkum cevvaiyiṉ, yārkkum nōkku aruṅ kāvaliṉ, valiyiṉ,
vēloṭu vāḷ vil payiṟṟaliṉ, veyya cūḻcciyiṉ, velaṟku aru valattiṉ,
cālpuṭai uyarviṉ, cakkaram naṭattum taṉmaiyiṉ, talaivar ottuḷatē.