கம்பராமாயணம் 93 · பால 3.12

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சினத்தயில் கொலைவாள் - சினம் மிக்க வேலும், பகைவரைக் கொல்லும் வாளும்; சிலை, மழு, தண்டு சக்கரம் தோமரம் உலக்கை - வில்லும் மழுவும் கதையும் சக்கரம் தோமரம், உலக்கை ஆகியவையும்; கனத்திடை உருமின் வெருவரும் கவண்கல் - மேகத்திலுள்ள இடியும் அஞ்சும்படியான கவண்கல்லும்; என்று இவை கணிப்புஇல - என்று கூறப்படும் படைக்கலங்கள், அளவிட முடியாதவை; கொதுகின் இனத்தையும் - கொசுக்களின் கூட்டத்தையும்; உவணத்து இறையையும் - பறவைகளின் வேந்தனான கருடனையும்; இயங்கும் காலையும் - விரைந்து செல்லும் காற்றையும்; இதமல நினைவார் மனத்தையும் - நன்மை யல்லாதவைகளை நினைப்பவர் மனத்தினையும்; எறியும் பொறிஉள என்றால் - கொல்லவல்ல இயந்திரங்களும் அந்த மதிலில் உள்ளன என்றால்; மற்று இனி உணர்த்துவது எவன் - மதிலின் காவலைப் பற்றி விரித்துரைக்க என்ன இருக்கிறது.

சினத்து அயில் வீரர்களது கோபத்தை படையின் மேலேற்றிக் கூறினார். அயோத்தி நகரத்தில் மதில் பல விதமான பொறிகளைத் தன்னுள் கொண்டு, நல்ல காவலாயிருப்பதைக் கூறினார். அந்த மதிலில் அமைந்துள்ள போர்க் கருவிகள் மிகச் சிறிய உயிரையும் கொல்லும் என்பதற்குக் கொசுவையும் மிக உயரத்தில் செல்லுவனவற்றையும் அழிக்கும் என்பதற்குக் கருடனையும், உருவமற்றவைகளையும் அழிக்கும் என்பதற்காக காற்றையும் மிக விரைந்து செல்லும் காண இயலாதனவற்றையும் துணிக்கும் என்பதற்கு மனத்தையும் கூறியுள்ள நயம் கருதத்தக்கது. உலக்கை: இரும்பு உலக்கை. தோமரம்: ஈட்டி. கவண்கல்: கவணெறிகல்லாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Furious spears, killing swords, bows, battle-axes, maces, discuses, javelins, iron pestles,
  2. and sling-stones that frighten even the thunder in the clouds: these are past counting; and if there are
  3. engines that strike down swarms of gnats, and the king of the birds, and the moving wind,
  4. and even the minds of those who think of harm, what more is there to say?

What the poem says

The defences of Ayōttī's wall are beyond counting. It holds spears, swords, bows, axes, maces, discuses, javelins, iron pestles and sling-stones that would frighten thunder itself. Its machines can strike down anything. They can hit the tiniest creature, a gnat. They can reach the highest flier, Garuḍa, king of the birds, and even the formless wind. Fastest and most invisible of all, they can strike the very thoughts of anyone who plans harm against the city. After that, there is nothing left to say about how well it is guarded.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciṉattu ayil kolai vāḷ cilai maḻut taṇṭu cakkaram tōmaram ulakkai
kaṉattiṭai urumiṉ veruvarum kavaṇ kal eṉṟu ivai kaṇippu ila; kotukiṉ
iṉattaiyum uvaṇattu iṟaiyaiyum iyaṅkum kālaiyum itam ala niṉaivār
maṉattaiyum eṟiyum poṟi uḷa; eṉṟāl, maṟṟu iṉi uṇarttuvatu evaṉō?