கம்பராமாயணம் 9229 · யுத்த 27.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தென்தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் - அழகிய இடத்தை உடைய கடலைத் தோண்டின சகரபுத்திரரின் வழித்தோன்றலாகிய இராமபிரானின் அருளைப் பெற்ற சிறுவனான செம்மைக் குணம் வாய்ந்த அங்கதன்; என்னை வென்று அலைத்து ஆர்த்து போர்த்தொழில் கடந்த வெய்யோன் - என்னை வென்று வருத்திக்கட்டிப் போர்த் தொழிலில் வெற்றிபெற்ற கொடியவனாகிய; தன்தலை எடுப்பக் கண்டு தானவர் தலைகள் சாய - இந்திரசித்தினது தலையை எடுப்பக் கண்டு, அசுரர்கள் தலைகள் அச்சத்தால் சாயுமாறு; என்தலை எடுக்கலானேன் இனிக் குடை எடுப்பேன் என்றான் - என்னுடைய தலையைத் தூக்கிப்பார்க்கலானேன்; இனி என் வெண்கொற்றக் குடையையும் எடுப்பேன் என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The noble youth graced by the descendant of him who dug the fair-shored sea,
- lifting the head of that cruel one who defeated me, harried me, bound me and triumphed in war,
- as I watch him lift that head, while the heads of the Tāṉavas droop,
- I have come to lift my own head; now I shall lift my royal umbrella," he said.
What the poem says
Intiraṉ plays on the word "head". The young warrior blessed by Irāmaṉ (descended from the line of Cakaraṉ, whose sons dug out the ocean) has lifted the head of the demon who once beat and bound Intiraṉ. Now the heads of the demons bow in fear, Intiraṉ can hold his own head high, and he can raise again the white umbrella that is the emblem of his kingship.