கம்பராமாயணம் 9228 · யுத்த 27.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“எல்லிவான் மதியின் உற்றகறை என - “இரவில் விளங்கும் வெள்ளிய சந்திரனிடத்துப் பொருந்திய களங்கம் போல; என்மேல் வந்து புல்லிய வடுவும் போகாது” என்று அகம் புலம்புகின்றேன் - என்மேல் வந்து பொருந்தியுள்ள பழியும் நீங்காது போலும்” என்று மனம் புலம்புகின்ற யான்; வில்லியர் ஒருவர் நல்க துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன் - (இப்போது) வில் வீரராகிய ஒருவர் அருளியதால் அந்த வடுதுடைக்கப்பெற்று இதுகாறும் இருந்த என் வெறுமை தன்னையும் தீர்ந்தேன்; செல்வமும் பெறுதற்கு உண்டோகுறை? இனி, சிறுமையாதோ? - இனி என் அரசச்செல்வத்தையும் பெறுதற்குக் குறையேதும் உண்டோ? இனிச் சிறுமைதான் யாதுளது?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Like the stain that clings to the bright moon of the night, the scar that came
- and settled upon me will never leave," so I lamented in my heart.
- Now that one bowman has granted it, I am rid of the emptiness, wiped clean;
- is anything still lacking for me to regain my wealth? What smallness is left now?
What the poem says
Intiraṉ speaks. His defeat by Intiracittu had marked him like the dark spot on the moon, a stain he thought would never fade. Now a single archer, Ilakkuvaṉ, has wiped it away. With his enemy gone, nothing stands between him and his lost royal glory, and no humiliation remains.