கம்பராமாயணம் 9231 · யுத்த 27.64

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், 'மாயத்தோனைச்
சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க 'என்பான்,
விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிவு பார்த்து.

பொருள் · Meaning in Tamil

வரதன், போய் மறுகா நின்ற மனத்தினன் - வரந்தரத்தக்க பெருமையனாகிய இராமன் மிகவும் கலங்கிய மனத்தை உடையவனாய்; தருமமே தாங்க மாயத்தோனைச் சரதம் போர் வென்று மீளும் என்பான் - 'தருமமே துணைநின்று தாங்க மாயத்தவனாகிய இந்திரசித்தனைப் போரில் வென்று (இலக்குவன் நிச்சயமாகத் திரும்புவான்' என்று எண்ணுகின்றவனாய்; விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் - விரதத்தை மேற்கொண்டு உயிரைத்தாங்கியவனாய் தனது மீட்சியை எதிர் நோக்கி இருக்கும்; பரதன் போன்று, தம்பிவருகின்ற பரிசுபார்த்து இருந்தான் - பரதனைப் போன்று, தம்பி இலக்குவன் மீண்டும் வருகின்ற தன்மையை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The boon-giver, his mind sorely troubled, saying, "That sorcerer
  2. he will surely defeat in battle and return, with dharma itself to uphold him,"
  3. like Paratan, who took a vow and, holding on to life, watches for his own return,
  4. so he sat, watching for the manner of his brother's coming.

What the poem says

Meanwhile Irāmaṉ waits anxiously, telling himself that dharma will bring Ilakkuvaṉ back victorious from the sorcerer Intiracittu. The poet compares him to Paratan, who vowed to live as an ascetic and kept himself alive only in hope of Irāmaṉ's return from exile. Now it is Irāmaṉ who waits like that for his brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varataṉ, pōy maṟukāniṉṟa maṉattiṉaṉ, 'māyattōṉaic
caratam pōr veṉṟu mīḷum, tarumamē tāṅka 'eṉpāṉ,
viratam pūṇṭu, uyiriṉōṭum taṉṉuṭai mīṭci nōkkum
parataṉ pōṉṟu iruntāṉ, tampi varukiṉṟa paricu pārttu.