கம்பராமாயணம் 9232 · யுத்த 27.65

Section யுத்த காண்டம் / 27. இந்திரசித்து வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வன்புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த - வலிதாகிய பகைப்புலத்தில் சென்று வென்று மீளுகின்ற தம்பிமேல் வைத்த; தன் நயனப்புலம் என்னும் தாமரை மாலை சொரியும் தாரை - தன் கட்புலம் என்கின்ற தாமரை மாலை மாலையாகச் சொரிகின்ற கண்ணீர்த்தாரை; அன்பு கொல்? அழுகணீர்கொல்? ஆனந்த வாரியே கொல்? - அன்பு காரணமானதோ? அல்லது (அவன் பிரிந்த துன்பம் நினைந்து வருந்தி) அழுத கண்ணீரோ? அல்லது அவனது வெற்றி கண்டு மகிழ்ந்து உகுத்த உவகைக் கண்ணீரோ? அல்லது; என்புகள் உருகிச் சோரும் கருணை கொல்? யார், அது ஓர்வார்? - என்புகளும் உருகும்படியாகச் சோர்கின்ற கருணைக் கண்ணீரோ? அதை அறிபவர்யார்? யாருமிலர்!

ஒருவர்க்குக் கண்ணீர் பெருகுதற்குரிய காரணங்கள் அன்பும், அழுகையும், கருணையும் என நான்காகுமானால், இராமன் இலக்குவன் மீண்டமை கண்டு சொரிந்த கண்ணீர் இந்நான்கனுள் எக்காரணம் பற்றியது என அறிவது அரிதாகுமென்பார் “யார் அது ஓர்வார்?” என்றார் ஒருவேளை இந்நான்குமே காரணம் ஆதலும் கூடும்! “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன் கணீர் பூசல்தரும்” (71) என்னும் வள்ளுவத்தின் படி அன்பினால் கண்ணீர் தோன்றலாம்; பிரிவினால் கண்ணீர் வருமென்பதை உலகியலிலேயே உணரலாம்! உவகையினால் கண்ணீர் வருமென்பதை, “வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டனனென்னுமுவகை, ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து. வான்பெயத்தூங்கிய சிதரினும் பலவே” (277) என்னும் புறப்பாட்டால் உணரலாம். கருணையென்பது தொடர்பு கருதாத மன நெகிழ்ச்சி உயிர்கள் மேல் வைத்த நேயம். இஃது என்புருகக் கசியும் கசிவு. இராமனின் கண்ணீர் இதில் எவ்வகைப் பட்டது? என்று வினவிய கவிஞர், யாரறிவார் என முடித்துள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The garland-like stream fixed upon his brother returning after crossing the hostile field,
  2. poured forth by the lotuses called his eyes,
  3. was it love? Was it tears of weeping? Was it a flood of bliss?
  4. Was it compassion that melts the very bones and flows? Who can tell?

What the poem says

Irāmaṉ sees Ilakkuvaṉ coming back from enemy ground and his lotus eyes pour tears like a garland. The poet asks what caused them: love, grief at the separation, joy at the victory, or a compassion so deep it melts the bones, and does not say. Perhaps all four.

The commentary illustrates each cause from classical Tamil: the Tirukkuṟaḷ on love that no bolt can lock in and that shows itself in tears, and a Puṟanāṉūṟu poem in which an old mother, hearing that her son died killing an elephant in battle, sheds more tears of pride than at his birth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉ pulam kaṭantu mīḷum tampimēl vaitta mālait
taṉ pula nayaṉam eṉṉum tāmarai coriyum tārai,
aṉpukol? aḻu kaṇīrkol? āṉanta vāriyēkol?
eṉpukaḷ urukic cōrum karuṇaikol? yār atu ōrvār?