கம்பராமாயணம் 924 · பால 14.38

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அம் மலை) குல நீல மணித் தலத்தும் - சிறந்த இந்திர நீலக் கற்களால் அமைந்த அம்மலை (முறையே); அஞ்சனக் கிரியின் அன்ன - கரிய மலையை ஒத்த; அழி கவுள் யானை - மதநீர் ஒழுகும் கன்னம் உடையதுமான யானைகளை; கொன்ற வெஞ்சினத்து அரியின் - கொன்ற கடுங்கோபமுடைய சிங்கத்தினது; திண் கால் சுவட்டொடு - சிங்கத்தினது வலிய கால்கள் பட்ட அடித்தடங்களும்; விஞ்சை வேந்தர் குஞ்சி அம் தலத்தும் - வித்தியாதர அரசர்களின் அழகிய மயிர்முடியுள்ள தலையிலும்; மாதர் பஞ்சி அம் கமலம் - (அவர்) மனைவியரின் செம்பஞ்சு ஊட்டிய அடித் தாமரைகள்; பூத்த பசுஞ் சுவடு - படுதலால் உண்டாகிய ஈரமான சுவடுகளும்; உடைத்து - உடையதாக இருந்தது.

அம் மலையின் இடங்களில் யானையோடு போர்செய்து அவற்றைக் கொன்ற சிங்கங்களின் அடிச்சுவடுகள் பட்டுள்ளன (ஒரு புறம்) ஊடலில் பணிந்த தலைவரின் முடியுள்ள தலைகளில் அவர் மனைவியரின் காற்சுவடுகள் பட்டன (இன்னொரு புறம்); இவ்வாறு அம் மலையில் அச்சக் குறிகளும் இன்பக் குறிகளும் ஒருங்கே காணப்பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Along with the firm footprints of fierce, raging lions that killed
  2. elephants like mountains of collyrium with musth-streaming cheeks, the mountain bears,
  3. on the lovely tufted heads of the Viccai kings, and on its floors of fine blue sapphire,
  4. the fresh prints of their wives' lotus feet, reddened with lac.

What the poem says

The mountain, floored with blue sapphire, carries two kinds of marks side by side. There are the heavy pawprints of lions that have fought and killed huge elephants. There are also the dainty red footprints of the Viccātarar women, their soles dyed with red lac paste.

Those footprints are found even on their husbands' heads. In Tamil love poetry a husband begging forgiveness after a quarrel bows at his wife's feet. So the mountain shows signs of terror and signs of love together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcaṉak kiriyiṉ aṉṉa aḻi kavuḷ yāṉai koṉṟa
veñ ciṉattu ariyiṉ tiṇ kāl cuvaṭṭoṭu, viñcai vēntar
kuñci am talattum, nīlak kula maṇit talattum, mātar
pañci am kamalam pūtta pacuñ cuvaṭu uṭaittu maṉṉō!