கம்பராமாயணம் 925 · பால 14.39

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செங்கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா,
பொங்கு இருங் கூந்தல், சோரா, புருவங்கள் நெரியா, பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு உளர்ந்து, அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டுக், கின்னரம் மயங்கும் மாது ஓ!

பொருள் · Meaning in Tamil

மங்கையர் - மகளிர்; செங்கயல் அனைய நாட்டம் - அழகிய கயல் மீன்களையொத்த கண்கள்; செவி உறா - காதுவரை சென்று மீளாதவாறும்; முறுவல் தோன்றா - பற்களில் ஒளி வெளியே தோன்றாவாறும்; பொங்கு இருங் கூந்தல் சோரா - மிகத் திரண்ட மயிர் முடிப்புக் குலைந்து விழாதபடியும்; புருவங்கள் நெரியா - புருவங்கள் வளைந்து தோன்றாதபடியும்; பூவின் அங்கையும் மிடறும் கூட்டி - தாமரை போன்ற தம் உள்ளங்கையையும் குரலையும் ஒருவழிப்படுத்தி; நரம்பு அளைந்து - நரம்பைத் துழாவி (அதனால் உண்டாக்கும்); அமுதம் ஊறும் - அமுதம் போல் இனிமை தோற்றும்; பாடல் கேட்டு - இன்னிசையைக் கேட்டு; கின்னரம் மயங்கும் - கின்னரப் பறவைகளும் திகைத்து நிற்கும்.

'அங்கையும் மிடறும் கூட்டி நரம்பளைந்து' என்றது, மிடற்றுக் குரலுக்கு ஏற்பக் கைத்தொழில் புரிந்து நரம்பில் இன்னோசை உண்டாக்கி என்றபடி. கின்னரம்: இசையின் குற்றங்களையும் குணங்களையும் அறியவல்லதாய் எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாக இருக்கும் ஒருவகைப் பறவை. இசையில் வல்ல தேவசாதி என்றும் பொருள் கூறுவர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their eyes like red carp not darting to their ears, their smiles not showing,
  2. their thick, piled hair not slipping loose, their brows not knitting,
  3. joining their lovely flower-hands with their voices as they stroke the strings,
  4. the women sing songs that well up like nectar, and the kiṉṉaram birds are bewildered to hear them.

What the poem says

Women of the mountain play the lute and sing. They follow the rules of good performance: no rolling of the eyes, no grinning, no loosening hair, no frowning brows. Their hands on the strings stay perfectly in step with their voices.

The music is so sweet that the kiṉṉaram are spellbound. These are mythical birds, always found in male and female pairs, that can judge every fault and virtue in music. Some take the word to mean the Kinnaras, a race of heavenly musicians.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṅkayal aṉaiya nāṭṭam cevi uṟā, muṟuval tōṉṟā,
poṅku iruṅ kūntal, cōrā, puruvaṅkaḷ neriyā, pūviṉ
am kaiyum miṭaṟum kūṭṭi, narampu aḷaintu, amutam ūṟum
maṅkaiyar pāṭal kēṭṭu, kiṉṉaram mayaṅkum mātō!