கம்பராமாயணம் 926 · பால 14.40

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காதொடும் - மகளிர் தம் அழகிய காதுகளோடு; உறவு செய்யும் - உறவு கொள்ளுகின்ற; கொள்ளை வாள் கண்ணினார்தம் - (ஆடவர் உயிரைக்) கவரவல்ல வாள் போன்ற கண்களையுடைய மகளிர் அணிந்த; கள் அவிழ் கோதை - தேன் சொரியும் மலர் மாலையணிந்த; மாதர்தம் - மகளிர் தம்; குங்குமக் குழம்பு தங்கும் - குங்குமச் சேறு தங்கிய; தெள்ளிய பளிங்குப் பாறை - தெளிந்த நிறத்தையுடைய பளிங்குப் பாறையினால் இயன்ற; தெளிசுனை வரம்பு இல - தெளிந்த சுனைகள் மிகப் பல; மணியில் செய்த வள்ளமும் - செம்மணியால் இயன்ற கிண்ணங்களும், நறவும் என்ன - கள்ளும் போல; பொலியும் - விளங்குகின்றன.

குங்குமக் குழம்பை அப்பிய மாதர் நீராடுவதனால் பளிங்குச் சுனையில் குங்குமக் குழம்பு தங்கும் என்பது. அதனால் அப் பளிங்குப் பாறை செம்மணி போல் தோன்ற, அக் குங்குமம் கலந்த நீர் நறவு போலத் தோன்றும் என்பது புலனாகும் - தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the women wearing garlands dripping honey, whose plundering sword-like eyes
  2. make friends with their ears, the saffron paste settles
  3. in the clear springs in the pure crystal rock; like goblets made of gems
  4. filled with wine, countless of them shine.

What the poem says

Women with long eyes stretching back to their ears bathe in the clear pools set in crystal rock. The saffron paste on their bodies washes off and tints the water red.

Each crystal basin now looks like a cup carved from a ruby, and the reddened water inside it looks like wine. There are countless such pools on the mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷ aviḻ kōtai mātar kātoṭum uṟavu ceyyum
koḷḷai vāḷ kaṇṇiṉārtam kuṅkumak kuḻampu taṅkum
teḷḷiya paḷikkup pāṟait teḷi cuṉai, maṇiyil ceyta
vaḷḷamum naṟavum eṉṉa varampu ila poliyum maṉṉō!
கம்பராமாயணம் 926 · சுவடி Chuvadi